குருதி ஆட்டம் திரை விமர்சனம்

 


அதர்வா, ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் தற்போது வெளியாகி இருக்கும் படம் குருதி ஆட்டம்.ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் தயாரிக்க படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கதை, மதுரையைச் சேர்ந்த இளைஞரான அதர்வா பத்தாம் வகுப்பு அட்டம்ட் தேர்வு எழுத வருகிறார். அங்கு ஆசிரியராக வரும் கதாநாயகி மீது காதலில் விழுகிறார். அதே நேரம் கபடி எதிரணி விளையாட்டு வீரரான ராதிகாவின் மகன் கண்ணா ரவிக்கும் அதர்வாவுக்கும் சண்டை நடக்கிறது. இதனால் அதர்வா கைதாகிறார். பின் அதர்வாவுக்கு உதவிசெய்து நெருங்கிய நண்பராக மாறுகிறார் கண்ணா ரவி. இன்னொரு புறமு வைரஸ் காய்ச்சல் காரணமாக கண்மணி என்ற குழந்தை மருத்துவ மனையில் அனுமதிக்கப்படுகிறது. அப்போதிலிருந்து அந்த குழந்தையிடம் தனி அன்பு காட்டி வருகிறார் அதர்வா. இந்நிலையில் கண்ணா ரவி கொலை செய்யப்படுகிறார். இதை அறிந்த ராதிகா தன் மகனைக் கொன்றவனை பழி வாங்கினாரா? குழந்தை கண்மணியை அதர்வா காப்பாற்றினாரா? அதர்வாவுக்கு என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை. 


படத்தில் கபடி விளையாட்டு வீரராக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் அதர்வா. படம் முழுக்க சண்டைக்காட்சிகள் என்பதால் தன்னுடைய பங்கை கொடுத்திருக்கிறார் இவரை அடுத்து படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் கண்ணா ரவி மற்றும் வட்சன் இருவரும் நடித்திருக்கிறார்கள். படத்தில் ப்ரியா பவானி சங்கர், ராதிகா, ராதாரவி ஆகியோரும் நன்றாக நடித்துள்ளனர்.8 தோட்டாக்கள் படத்திற்கு பின்பு இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கியிருக்கும் இந்த குருதி ஆட்டம் திரைப்படத்தை ஒருமுறை ரசிக்கலாம். 

0 comments:

Pageviews