'இரவின் நிழல்' திரைப்படத்தை பார்த்த மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

 


திரு. மு. க ஸ்டாலின் அவர்கள், இயக்குனர் _ நடிகர் திரு. இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் இரவின் நிழல் திரைப்படத்தை கண்டுகளித்தார். திரைப்படத்தைப் பார்த்ததும் , முதல்வர் மு .க .ஸ்டாலின் அவர்கள் பார்த்திபனின் இந்த  அசாத்தியமான சாதனை  முயற்சியை வெகுவாகப் பாராட்டி, 

"இரவின் நிழல் திரைப்படம்  பற்றி ஒரே வார்த்தையில் சொல்வதெனில் அற்புதம் !" என்று பாராட்டி , பார்த்திபனையும்  படக்குழுவினர் யாவரையும் வாழ்த்தினார்.

முதல்வருக்கு இராதாகிருஷ்ணன் பார்த்திபன் அவர்கள் தனக்கே உரிய வித்தியாசமான பாணியில் 'நேற்றைய அரசியல் வரலாறு - 2092 "

எனும் முதல்வரின் சாதனைப் புத்தகத்தை வடிவமைத்து முதல்வரிடம் வழங்க, அதை ரசித்து பெற்றுக் கொண்டார்.

இரவின் நிழல் திரைப்படம் வெற்றிகரமாக 4 வது வாரத்தில் திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதுவரை இரவின் நிழல் 7 சர்வதேச விருதுகளை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பார்த்திபன் தமிழகம் முழுவதிலுமுள்ள திரையரங்குகளுக்கு சுற்றுப்பயணம் செய்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவிப்பதுடன்...

இப்படிப்பட்ட அசாத்தியமான உழைப்பிற்கு ரசிகர்கள் இப் படத்தை மாபெரும் வெற்றிப் படமாக்குவார்கள் என்ற நம்பிக்கையுடன்

இன்னும் உழைத்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், முதல்வரின் பாராட்டு , தனக்கு மிகுந்த தெம்பளிப்பதாக கூறி நன்றி தெரிவித்தார்!

0 comments:

Pageviews