டைரி திரைப்பட விமர்சனம்

 


நடிகர் அருள்நிதி நடிப்பில் பைவ் ஸ்டார் கிரியேஷன் தயாரிப்பில், இயக்குனர் இன்னாச்சி பாண்டியன் இந்த படத்தை இயக்கியுள்ளார், உதயநிதி ஸ்டாலின் இந்த படத்தை வெளியிட்டுள்ளார். தொடர்ந்து ஸ்டாலின் படங்களாக மற்றும் வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களையே தேர்ந்தெடுத்து அதில் மட்டும் நடித்து வருகிறார் அருள்நிதி. அருள்நிதியின் நடிப்பில் இந்த வாரம் வெளியாகியிருக்கும் படம்தான் டைரி.


காவல் அதிகாரிக்கான பணி நியமனத்திற்கு முன் பயிற்சி காலகட்டத்தில், பல ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற குற்ற வழக்கை ஒன்றை மீண்டும் தூசு தட்டி... அவை சரியான முறையில் தான் விசாரணை நடைபெற்று இருக்கிறதா? அல்லது ஏதேனும் புதிய தடயங்கள் அல்லது குற்றவாளிகளை இனம் காண முடிகிறதா? எனும் கோணத்தில் வழக்கு ஒன்றை இவர் தெரிவு செய்கிறார். அந்த வழக்கிற்கான விசாரணையை இவர் சரியான கோணத்தில் நடத்தினாரா? இல்லையா? என்பதே படத்தின் கதை.


காவல்துறை வேடத்துக்குக் கனகச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார் அருள்நிதி.  இந்த அவருடைய போலீஸ் தோற்றம் ரசிக்க வைக்கிறது. காவல்துறை உதவிஆய்வாளராக வரும் நாயகி பவித்ரா மாரிமுத்து நன்றாகவே நடித்திருக்கிறார். காவலராக நடித்திருக்கும் சாம்ஸ், பேருந்துப்பயணியாக வருகிற ஷாரா ஆகிய இருவருக்கும் பல இடங்களில் சிரிக்க வைக்கிறார்கள். பேருந்துகளில் திரைக்கதை பயணிக்கும் போது ஒளிப்பதிவாளரின் ரசனையான கோணங்கள், பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்துகிறது. திரில்லர் திரைப்படங்களுக்கே உரிய பின்னணி இசையை வழங்கி, இசையமைப்பாளர் ரதன் கவனிக்க வைக்கிறார். ஒரு சிக்கலான கதையை புத்திசாலித்தனமான திரைக்கதையுடன் கொடுத்திருக்கிறார் புது இயக்குநர் இன்னாசி பாண்டியன்.


டைரி விறுவிறுப்பான திகில் கலந்த திரைப்படம்.  ஒருமுறை நிச்சயம் பார்க்கவேண்டிய படம்.

0 comments:

Pageviews