மாயத்திரை ட்ரெய்லரை வெளியிட்ட பிரசாந்த்

 


ஸ்ரீ சங்கர நாராயணா சாமுண்டீஸ்வரி மூவிஸ் சார்பில் V.சாய்பாபு தயாரித்துள்ள படம் ‘மாயத்திரை’. இயக்குனர்கள் எழில், பாலா ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய T.சம்பத்குமார். இந்தப்படத்தை இயக்கியுள்ளார். விஸ்காம் பேராசிரியரான இவர் அடிப்படையில் திரைப்படக் கல்லூரி மாணவரான இவர் கூட.


அசோக்குமார் கதாநாயகனாக நடிக்க, சாந்தினி தமிழரசன், ஷீலா ராஜ்குமார் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் முக்கிய வேடங்களில் ஜெய்பாலா, தருண் மாஸ்டர், காதல் சுகுமார், காதல் சரவணன், பாவா லட்சுமணன், சுஜாதா மாஸ்டர், மாஸ்டர் ஆரவ் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.


ஒளிப்பதிவை இளையராஜா வேலுசாமியும், படத்தொகுப்பை கோடீஸ்வரன்-M.சுரேஷ் ஆகியோரும் கவனித்துள்ளனர். எஸ்.என்.அருணகிரி மற்றும் எஸ்.எஸ்.தமன் ஆகியோர் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளனர். பாடலாசிரியர் ஞானகரவேல் பாடல்களை எழுதியுள்ளார்.


இந்தப்படத்தின் ட்ரெய்லரை இன்று நடிகர் டாப்ஸ்டார் பிரசாந்த் வெளியிட்டு படக்குழுவினரை வாழ்த்தினார். இதுபற்றி பிரசாந்த் கூறும்போது, “இந்த ட்ரெய்லரை பார்க்கும்போதே ஹாரர் படங்களில் இது வித்தியாசமான முயற்சியாக இருப்பது தெரிகிறது.. குறிப்பாக ஒரு நாவல் பாணியிலான முயற்சி இதில் இருக்கிறது” என பாராட்டினார்..


இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் V.சாய்பாபு, இயக்குனர் T.சம்பத்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். வரும் ஆகஸ்ட்–5ஆம் தேதி இந்தப்படம் வெளியாக இருக்கும் இந்த படத்தை சரஸ்வதி எண்டர்பிரைசஸ் சார்பில் செந்தில் வெளியிடுகிறார்.


நடிகர்கள் ; அசோக்குமார், சாந்தினி தமிழரசன், ஷீலா ராஜ்குமார், காதல் சுகுமார், காதல் சரவணன், பாவா லட்சுமணன், நடன இயக்குனர்கள் சுஜாதா, தருண், இரவின் நிழல் படத்தில் நடித்துள்ள மாஸ்டர் ஆரவ் மற்றும் பலர்


தொழில்நுட்ப கலைஞர்கள்

தயாரிப்பாளர் ; V.சாய்பாபு

எழுத்து, இயக்கம் – T.சம்பத்குமார்.

இசையமைப்பு – எஸ்.என்.அருணகிரி மற்றும் எஸ்.எஸ்.தமன்

ஒளிப்பதிவு - இளையராஜா வேலுசாமி

படத்தொகுப்பு - கோடீஸ்வரன்-M.சுரேஷ்

கலை – கே.ஆர்.சிட்டிபாபு

பாடலாசிரியர் – S.ஞானகரவேல்

நடனம் – ராதிகா, பூபதி  

சண்டை பயிற்சி – பிரதீப் தினேஷ், திலீப்

தயாரிப்பு நிர்வாகி ; தேனி M சங்கர்,

லேப் ; ஜெமினி

தலைமை காசாளர் ; B. சுப்பிரமணியம்

ஸ்டில்ஸ் ; ராமசுப்பு

மேக்கப் ; M.கிருஷ்ணாராவ்

ஆடை வடிவமைப்பு ; V.நரேஷ்

மக்கள் தொடர்பு - ரியாஸ் கே அஹ்மத்.

தயாரிப்பு நிதி நிர்வாகம் ; M.சிவா

தயாரிப்பு மேற்பார்வை ; R.P.பாலகோபி

விளம்பர வடிவமைப்பு ; ஷபீர்.J

இசை ; பைவ்ஸ்டார் ஆடியோ


0 comments:

Pageviews