குளு குளு விமர்சனம்

 


அமேசான் காட்டில் பிறந்த கூகுள் (சந்தானம்) அங்கு ஏற்படும் பிரச்சனைகளின் காரணமாக தனது தாய்யை இழக்கிறார். இதுமட்டுமின்றி அங்கிருந்து கடற்கொள்ளையர்களால் கடத்தப்படும் கூகுள் வெவ்வேறு நாட்டில் நாடோடியாக பயணம் செய்து கடைசியாக சென்னையில் தனக்கென்று ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து அங்கேயே வாழ்ந்து வருகிறார். உதவி என்று யார் வந்து கேட்டாலும் எதையும் எதிர்பார்க்காமல் செய்கிறார் கூகுள். ஒரு நாள் தங்களது நண்பன் கடத்தப்பட்டுவிட்டான் என்று கூறி உதவி கேட்டு சில இளைஞர்கள் வருகிறார்கள். உடனடியாக அவர்களுக்கு உதவி செய்ய புறப்படும் கூகுள், இந்த பயணத்தில் அந்த இளைஞர்களுடன் இணைந்து அவர்களுடைய நண்பனை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் கதை.


வழக்கம் போல் நகைச்சுவை மட்டும் செய்து நடித்து வந்த சந்தானம் இப்படத்தில் அதற்க்கு நேர்மாறாக நடித்து ரசிகர்களை கவருகிறார். எதார்த்ததுடன் கலந்த செண்டிமெண்ட், சூழ்நிலையை புரிந்துகொண்டு செயல்படும் விதம் என கதாபாத்திரத்துடன் ஒன்றிப்போகிறார் சந்தானம். இளைஞர்களாக வந்த கவி, ஹரிஷ், யுவராஜ், நமீதா கிருஷ்ணமூர்த்தி என அனைவரும் தங்களது கதாபாத்திரத்திற்கு ஏற்ப நடித்துள்ளார்கள். கதாநாயகி அதுல்யா சந்திராவின் நடிப்பு ஓகே. வழக்கம் போல் வில்லனாக ரசிகர்களை கவரும் வண்ணம் நடித்துள்ளார் பிரதீப் ராவத். மரியம் ஜார்ஜ் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளார். மற்ற அணைத்து கதாபாத்திரங்களும் தனித்து காணப்படுகிறது. இயக்குனர் ரத்னகுமார் எடுத்துக்கொண்ட கதைக்களம் பாராட்டுக்குரியது.


பல நகைச்சுவை காட்சிகள் ரசிக்கும் வண்ணம் இருந்தாலும் கூட, சில நகைச்சுவை காட்சிகள் எடுபடவில்லை. திரைக்கதையில் முதல் பாதி சற்று தொய்வு ஏற்பட்டாலும், இரண்டாம் பாதி விறுவிறுப்பாக செல்கிறது. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சி தெறிக்கிறது. சந்தோஷ் நாராயணனின் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்க்கிறது. விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவு பிரமாதம். ஃபிலோமின் ராஜின் எடிட்டிங் பக்கா.


Rating - 3.5/5

0 comments:

Pageviews