ரீ ஷங்கர்லால் சுந்தர்பாய் ஷசுன் ஜெயின் மகளிர் கல்லூரி நடத்தும் சர்வதேச சதுரங்கப் போட்டி தொடக்க விழா
சென்னை, தி.நகரிலுள்ள ஸ்ரீ ஷங்கர்லால் சுந்தர்பாய் ஷசுன் ஜெயின் மகளிர் கல்லூரி, ஜி.ஆர்.டி மற்றும் சர்வதேச எப்ஐடிஇ மதிப்பீடு(International FIDE Rating) என்ற நிறுவனமும் இணைந்து 22.7.2022 மற்றும் 23.07.2022 ஆகிய இரு நாள்கள் சர்வதேச சதுரங்கப் போட்டியைக் கல்லூரி வளாகத்தில் நடத்துகின்றது. இப்போட்டியின் தொடக்க விழா 22.7.2022 அன்று காலை 09.00 மணியளவில் குத்து விளக்கு ஏற்றி இனிதே தொடங்கப்பட்டது. இவ்விழாவில் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத் தலைமை அலுவலகத்தின் உதவி மேலாளரும் சென்னை மாவட்ட சதுரங்க சங்கத்தின் செயலாளரும் சர்வதேச நடுவருமான திரு கே. கணேசன் IA அவர்களும் ப்ளூம் செஸ் அகாடமியின் நிறுவனர் மற்றும் பயிற்சியாளர் திரு எம்.ஏ.வேலாயுதம் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். மேலும் கல்லூரியின் செயலர் ஸ்ரீமதி உஷா அபய ஸ்ரீஸ்ரீமால், இணைச்செயலர் முனைவர் ஹரீஷ் எல்.மேத்தா, கல்லூரி முதல்வர் முனைவர் சா.பத்மாவதி, துணை முதல்வர் முனைவர் ச.ருக்மணி ஆகியோரும் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் முனைவர் சா.பத்மாவதி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். இவர் நம் கல்லூரியில் நடைபெறும் பல்வேறு விழாக்கள் பற்றியும் எங்கள் கல்லூரி மாணவி செல்வி ரிந்தியா அவர்கள் திரு.எம்.ஏ.வேலாயுதம் அவர்களின் மாணவி என்றும் ஜிஆர்டி இப்போடிக்கு 5,00,000 ரொக்கப் பரிசு வழங்குவது பற்றியும் பாராட்டிப் பேசினார். தொடர்ந்து சிறப்பு விருந்தினர் திரு கே. கணேசன் IA அவர்கள் தனது உரையில் சர்வதேச சதுரங்கப் போட்டி இக்கல்லூரியில் நடைபெறுவதற்கு நன்றியைத் தெரிவித்து தன்னுடன் வந்திருந்த திரு எம்.ஏ.வேலாயுதம் பற்றி எடுத்துரைத்தார். இவர் கார்த்திகேயன் முரளி, பிரக்னநாதா போன்ற பல கிராண்ட் மாஸ்டர்களுக்கு இளவயதிலேயே செஸ் கற்றுக்கொடுத்து, பல உலக இளைஞர் சாம்பியன்களை உருவாக்கியவர் என்று கூறினார். விழாவின் நிறைவாக துணை முதல்வர் முனைவர் ச.ருக்மணி அவர்கள் நன்றியுரை நவில விழா இனிதே நிறைவுற்றது.
0 comments:
Post a Comment