’D 3’ டைட்டில் லுக்கை வெளியிட்ட வெங்கட்பிரபு
பீமாஸ் என்டர்டெய்ன்மென்ட்ஸ் சார்பில் திரு.மனோஜ் மற்றும் ஜேகேஎம் புரொடக்சன்ஸ் சார்பில் திரு.சாமுவேல் காட்சன் இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் ’D 3’.
அறிமுக இயக்குநர் பாலாஜி இயக்கியுள்ள இந்தப்படத்தில் பிரஜின் கதாநாயகனாக நடிக்கிறார். வித்யா பிரதீப் கதாநாயகியாக நடிக்க, சார்லி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் வர்கீஸ் மேத்யூ, மோகமுள் அபிஷேக் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
இந்தப்படத்தின் டைட்டில் லுக்கை இயக்குநர் வெங்கட்பிரபு வெளியிட்டுள்ளார்.
ஒரேநாளில் நடக்கும் நிகழ்வுகளை மையமாக வைத்து உருவாகும் படங்களுக்கு ரசிகர்களிடம் எப்போதுமே தனி வரவேற்பு இருக்கிறது. காரணம் இதுபோன்ற கதைகளில் வேகமும் விறுவிறுப்பும் படத்தின் சுவாரஸ்யத்தை அதிகப்படுத்தும். இந்த ’D 3’படம் ஒரே நாளில் நடக்கும்
கதைக்களம் கொண்டது.
பெரும்பாலான படப்பிடிப்பை குற்றாலத்திலேயே நடத்தியுள்ளனர்.
படத்தின் இயக்குநர் பாலாஜி படம் பற்றி கூறும்போது, “நான் கேள்விப்பட ஒரு உண்மை விஷயம் பற்றி, அதேசமயம் இதுவரை வெளிவராத விஷயம் பற்றி இந்த கதையை உருவாக்கியுள்ளேன். அதனால் படம் ஆரம்பம் முதல் இறுதிவரை விறுவிறுப்பாக நகரும்” என்கிறார்.
மேலும் படப்பிடிப்பு அனுபவங்கள் குறித்து இயக்குநர் பாலாஜி கூறும்போது, “இயற்கை ஏற்படுத்திய பல பிரச்சனைகளையும் தடைகளையும் தாண்டி இந்தப்படத்தின் படப்பிடிப்பை நடத்தி முடித்தோம்.. குற்றாலத்தில் மழை சீசன் இல்லாத சமயத்தில் தான் படப்பிடிப்பை நடத்த துவங்கினோம்.. ஆனால் படப்பிடிப்பு நடந்த எழுபது சதவீத நாட்களில் எதிர்பாராத விதமாக மழையின் குறுக்கீட்டுடன் தான் படப்பிடிப்பை நடத்த வேண்டி இருந்தது.
கொரோனா சமயத்தில் கிட்டத்தட்ட 60 சதவீத படப்படிப்பு முடிவடைந்த சமயத்தில் இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துவந்த 3௦ வயது நடிகர் ஒருவர் கொரோனா தொற்றால் மரணம் அடைந்தார். அதனால் அவருக்கு பதிலாக வேறு ஒரு நடிகரை வைத்து மீண்டும் படப்பிடிப்பை நடத்தினோம்..
அதேபோல சென்னையில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனைக்கு ஒருநாள் வாடகையாக மட்டுமே ரெண்டரை லட்சம் ரூபாய் செலுத்தி படப்பிடிப்பு நடத்த தயார் நிலையில் இருந்தோம்.. ஆனால் அன்றைய தினம் காலை படப்பிடிப்பில் கலந்துகொள்ள ஹைதராபாத்தில் இருந்து சென்னை வந்திறங்கிய நடிகர் வர்கீஸ் மேத்யூவுக்கு விமான நிலையத்திலேயே கோவிட் பாசிடிவ் என ரிசல்ட் வர, படப்பிடிப்பு கேன்சல் ஆனது. இப்படி நிறைய அனுபவங்களை கடந்து இந்தப்படம் உருவாகியுள்ளது” என்று கூறியுள்ளார். .
நடிகர்கள் ; பிரஜின், வித்யா பிரதீப், சார்லி, வர்கீஸ் மேத்யூ, அபிஷேக்,
தொழில்நுட்பக் கலைஞர்கள் ;
தயாரிப்பு ; மனோஜ் (பீமாஸ் என்டர்டெய்ன்மென்ட்ஸ்) மற்றும் சாமுவேல் காட்சன் (ஜேகேஎம் புரொடக்சன்ஸ்)
இயக்கம் ; பாலாஜி
இசை ; ஸ்ரீஜித் எடவானா
ஒளிப்பதிவு ; மணிகண்டன்
படத்தொகுப்பு ; ராஜா ஆறுமுகம்
ஸ்டண்ட் ; ராம்போ விமல்
மக்கள் தொடர்பு ; A.ஜான்
0 comments:
Post a Comment