சுழல் வெற்றிக்காக கதிரை வாழ்த்திய இயல்வது கரவேல் படக்குழு

 


எமினென்ட் என்டர்டெய்ன்மென்ட்ஸ் சார்பில் டேனியல் கிறிஸ்டோபர் மற்றும் தென்னிலவன் இருவரும் இணைந்து தயாரித்துவரும் படம் ‘இயல்வது கரவேல்’. கதிர் மற்றும் குழந்தை நட்சத்திரமாக இருந்து தற்போது கதாநாயகியாக மாறியுள்ள யுவலட்சுமி இருவரும் இணைந்து நடிக்கும் இந்தப்படத்தை இயக்குவதன் மூலம் அறிமுக இயக்குனராக திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார் இயக்குனர் ஹென்றி.


சென்னை கல்லூரியை பின்னணியாக கொண்டு காதல் மற்றும் மாணவர்களின் அரசியல் ஆகியவற்றை மையப்படுத்தி உருவாகி வரும் இந்தப்படத்தில் மாஸ்டர் மகேந்திரன் வில்லனாக நடிக்கிறார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் கதிரும் மகேந்திரனும் நிஜத்தில் நெருங்கிய நண்பர்கள். அப்படிப்பட்ட இருவரும் எதிரிகளாக நடிப்பது பார்வையாளர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.


இந்தநிலையில் சமீபத்தில் இயக்குனர்கள் புஷ்கர்-காயத்ரி ஆகியோரின் தயாரிப்பில் அமேசான் பிரைம் ஒரிஜினலில் சுழல் ; தி வோர்டேக்ஸ் வெப்தொடர் வெளியானது. கதிர், ஸ்ரேயா ரெட்டி, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பார்த்திபன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த  இந்த வெப் தொடர் பாசிட்டிவான விமர்சனங்களை தொடர்ந்து பெற்று வருகிறது. இதையடுத்து இயல்வது கரவேல் படக்குழுவினர் நடிகர் கதிரை நேரில் சந்தித்து இந்த வெப் தொடரின் வெற்றிக்காக அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

0 comments:

Pageviews