இடிமுழக்கம்” படத்தின் முதல் பார்வைக்கு சிறப்பான வரவேற்பு

 


Skyman Films International  கலைமகன் முபாரக் தயாரிப்பில், 

GV பிரகாஷ் குமார்-காயத்திரி நடிப்பில், இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில், உருவாகியுள்ள “ இடிமுழக்கம்” படத்தின் முதல் பார்வைக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது.

இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் GV.பிரகாஷ் குமார் மற்றும் காயத்திரி முக்கிய வேடங்களில் நடிக்க,  Skyman Films International  கலைமகன் முபாரக் தயாரிப்பில் உருவாகி வரும் ‘இடிமுழக்கம்’ திரைப்படம் துவங்கப்பட்ட தருணத்திலிருந்தே இருந்தே ரசிகர்களிடம் பெரும் ஆவலை ஏற்படுத்தி வருகிறது. மிகச் சரியான விளம்பரங்கள்  மூலமாகவும், கடின உழைப்பின் மூலமாகவும் தனது தயாரிப்புகளில் வெளியாகும் எல்லா  படங்களிலும்,  வெற்றியை பெரும்  கலைமகன் முபாரக் போன்ற ஒரு தயாரிப்பாளருடன், விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட, யதார்த்தம் மற்றும் உணர்ச்சிமிக்க கதைக்கருகளை தரும் இயக்குநர் சீனு ராமசாமி இணைய, இளைஞர்களின் செல்லப்பிள்ளை GV.பிரகாஷ் குமார் உடைய நடிப்பில் உருவாக்கியுள்ள “இடிமுழக்கம்” திரைப்படம் ரிலீஸுக்கு முன்னரே பிரமாண்டமான வரவேற்பை பெற்றுள்ளது.  இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் முன் வெளியான ப்ரீ-லுக் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. வழக்கமாக, ஏ-லீக் நட்சத்திரங்கள் மட்டுமே தங்கள் படங்களில் இந்த பாக்கியத்தை அனுபவிக்கிறார்கள், ஆனால் இப்போது, GV.பிரகாஷ் பார்வையாளர்கள் மற்றும் ரசிகர்களிடமிருந்து இந்த அன்பையும் மரியாதையையும் பெற்றிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. தனித்துவமான கதைக்கரு மூலமாக தொடர்ந்து வணிகரீதியிலான வெற்றி  திரைப்படங்களை அவர் கொடுத்து வருவதால், அவர்  திரைத்துறையில் பெரும் உயரத்தை எட்டியுள்ளார். இந்தத் திரைப்படத்தின் முதல் பார்வை பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.  தனித்துவமான கதைக்கருவை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள தோற்றத்தை தரும் இப்படத்தை பார்வையாளர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். 

இப்படத்தில் NR ரகுநந்தன் இசையமைக்க, கவிப்பேரரசு வைரமுத்து பாடல்வரிகளை எழுதுகிறார். ஜீவி பிரகாஷ் குமார், காயத்திரி தவிர சரண்யா பொன்வண்ணன், எம்.எஸ்.பாஸ்கர், அருள்தாஸ் மற்றும் பல திறமையான நடிகர்கள் இந்த படத்தில் நடிக்கின்றனர்.

0 comments:

Pageviews