செம்பி படகுழுவினரை வாழ்த்திய கமல்ஹாசன்

 


கமல்ஹாசன் நடிப்பில்  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் விக்ரம் படத்திற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக  செம்பி படக்குழுவினர் கமல்ஹாசனை நேரில் சந்தித்தனர். 


இந்த சந்திப்பின் போது செம்பி படத்தின் டிரைலரை கமல்ஹாசன் 

பார்த்து வெகுவாக பாராட்டினார். 


செம்பி படத்தின் தயாரிப்பாளர்கள்  ட்ரைடெண்ட் ரவீந்திரன், 

ஏ .ஆர் .எண்டர்டைன்மெண்ட் ரியா , ஆடிட்டர் அக்பர் அலி, படத்தின் இயக்குநர் பிரபு சாலமன், கோவை சரளா மற்றும் அஸ்வின் ஆகியோர் இந்த சந்திப்பின் போது உடனிருந்தனர். 


மேலும் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள கோவை சரளாவை நடிப்பு ராட்சசி என்று கமல்ஹாசன் பாராட்டினார். 


செம்பி படத்தின் டிரைலரை கமல்ஹாசன் பாராட்டியது தங்களுக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளதாகவும், படம் விரைவில் திரைக்கு வர தயாராகி வருவதாகவும் படக்குழுவினர் தெரிவித்தனர்.

0 comments:

Pageviews