LYCA PRODUCTIONS சுபாஸ்கரன் மற்றும் SIVAKARTHIKEYAN PRODUCTIONS இணைந்து வழங்கும், நடிகர் சிவகார்த்திகேயனின் “டான்”

 


LYCA PRODUCTIONS சுபாஸ்கரன் மற்றும்  SIVAKARTHIKEYAN PRODUCTIONS இணைந்து வழங்கும், நடிகர் சிவகார்த்திகேயனின் “டான்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு. 


நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவாகியுள்ள ‘டான்’ திரைப்படம் மே 13, 2022 அன்று உலகம் முழுவதும்,திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தை Lyca Productions உடன் Sivakarthikeyan Productions இணைந்து தயாரித்துள்ளனர். அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இந்த படத்தை இயக்கியுள்ளார், இப்படத்தில் பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார் உடன் SJ சூர்யா, சமுத்திரக்கனி மற்றும் பல  முன்ணனி நடிகர்கள் நடித்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் Red Giant Movies  சார்பில் உதயநிதி ஸ்டாலின் படத்தை வெளியிடுகிறார். இப்படத்தின் வெளியீட்டை ஒட்டி படக்குழுவினர் இன்று பத்திரிக்கை நண்பர்களை சந்தித்தனர். 


இந்நிகழ்வில் 


கலையரசன், இணை தயாரிப்பாளர். Sivakarthikeyan Productions பேசியது... 


டான் படம் எங்களுடைய 5வது படம், இந்த படத்தை எங்களுடன் இணைந்து Lyca Productions தயாரித்துள்ளனர், அதற்கு நன்றி. Red Giant Movies   இந்த படத்தை வெளியிடுவது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த படம் சிபி உடைய கடின உழைப்பு. அதனாலயே இந்த படம் பெரிய வெற்றி பெறும். அவர் எங்களுக்குள் எற்பட்ட கிரியேட்டிவ் சிக்கலை எல்லாம்  சரிசெய்து, படத்தை சிறப்பாக உருவாக்கியுள்ளார். நடிகர்கள் ஒத்துழைப்பு இந்த படத்தில் அற்புதமாக இருந்தது. இந்த படத்தில் புகைபிடிக்கும் காட்சிகள் இல்லை, குடும்பங்கள் கொண்டாடும் படமாக இது இருக்கும்.  

கலை இயக்குனர் உதய்குமார் பேசியது...

பிரைவேட் பார்ட்டி ஐடியா இயக்குனர் உடையது. காடு போன்று அந்த பாடல் அமைக்க திட்டமிட்டோம், அது அமைந்தது. அது மிகப்பெரிய ஹிட்டானது மகிழ்ச்சி 

ஒளிப்பதிவாளர் KM பாஸ்கரன் பேசியது....

டான் படம் ரொம்ப  ஸ்பெஷல், சிபி இந்த கதையை கூறும் போது, படத்தில் சிவ கார்த்திகேயன் மூன்று பருவங்களில் வருவதாக சொன்னார். அது சுவாரஷ்யமாக இருந்தது. அது படத்தில் நன்றாக வந்துள்ளது.  உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி. 



எடிட்டர் நாகூரான் பேசியது..,

இந்த படம் நம்மளை போன்ற மக்களின் தேடல் தான். இந்த படத்தை தியேட்டரில் பார்த்து, எங்களை சப்போர்ட் செய்யுங்கள். நன்றி. 


நடிகை சிவாங்கி பேசியது..,

டான் படம் எனது முதல் படம். முதல் படத்திலயே இவ்வளவு பெரிய குழுவுடன் பயணித்தது மகிழ்ச்சி. நிறைய கற்றுகொண்டேன். இந்த படத்தில் பயணித்தது கல்லூரி  போனது போன்ற உணர்வை கொடுத்தது. சிபி சார் நிறைய விஷயங்களை சொல்லிகொடுத்தார். இந்த படத்தில் நடித்தது மகிழ்ச்சி. 


நடிகர் பால சரவணன் கூறியதாவது...

இயக்குனருக்கும், தயாரிப்பாளர் மற்றும் கதாநாயகனுக்கும் நன்றி. டான் திரைப்படம் கிடைக்கவில்லை என்றால், என் உடல்நிலையிலயே மாற்றம் ஏற்பட்டிருக்கும். இதற்காகவே டான் படத்திற்கு நன்றி. இந்த திரைப்படம் எல்லா மாணவர்களையும், கல்லூரி போகதவர்களையும் வசியப்படுத்தும்.  

எல்லோருக்கும் நன்றி. 




நடிகை பிரியங்கா மோகன் பேசியது...

டான் ஒரு குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம், உங்களுக்கு படம் பிடிக்கும் என்று நம்புகிறோம். நான் மூன்று படங்கள்  தான் பண்ணியுள்ளேன்.  ஆனால் நீங்கள் கொடுக்கும் அளவற்ற அன்பிற்கு நன்றி. மே 13 படம் தியேட்டரில் வெளியாகவிருக்கிறது, நீங்கள் பார்த்து ஆதரவு தர வேண்டும். நன்றி


இயக்குனர் சிபி சக்ரவர்த்தி பேசியது…

சிவகார்த்திகேயன் சாருக்கு நன்றி. ஒரு இயக்குனருக்கு ஒரு முதல் படம் இப்படி அமையாது, எனக்கு அமைத்து கொடுத்ததற்கு சிவகார்த்திகேயன் சாருக்கு நன்றி. இந்த படம் ஓடினால், இன்னும் பலருக்கு வாய்ப்பு தருவதாக கூறினார். கலையரசன் சார், சுபாஸ்கரண் சார், தமிழ் குமரன் சாருக்கு நன்றி. உங்கள் எல்லோருடைய வாழ்கையிலும் கனக்ட் ஆகும் படி இந்த படம் இருக்கும். அனைவரும் கடினமாக உழைத்துள்ளோம். நீங்கள் படம் பார்த்து நன்றாக எழுதினால், நாங்கள் மகிழ்ச்சிடைவோம். நீங்கள் நன்றாக எழுதும் படியான படமாக இந்த படம் இருக்கும். படத்திற்கு நீங்கள் ஆதரவு தர வேண்டும்.  நன்றி.



நடிகர் சிவகார்த்திகேயன் கூறியதாவது....

டான் கதை நம்மளுடைய கதை, நாம சில நேரம் மறந்த உணர்வுகளை, நினைக்க தவறிய சில உணர்வுகளை இதில் பதிவு பண்ண வேண்டும் என நினைத்திருக்கிறோம். சில வெளிப்படுத்த முடியாத உணர்வுகளையும் பதிவு பண்ண வேண்டும் என நினைத்திருக்கிறோம். படத்தில் எண்டர்டெயின்மெண்ட் இருக்கிறது, அதுபோக உணர்வுபூர்வமான சில விஷயங்கள் தான் எங்களை இந்த படம் பண்ண வைத்தது.   ஒரு நண்பன் அவனது வாழ்கையை உங்களுடன் பகிர்ந்துகொண்டால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும் படம். இது மிகப்புதுமையான, யாரும் இதுவரை சொல்லாத கதையெல்லாம் அல்ல. சில காட்சிகள் புதியதாக இருக்கும்.  நாமெல்லாம் அன்றாட வாழ்கையில் கடந்து வந்த உறவுகளை பேசும் படமாக இருக்கும். டான் படத்தின் பெயர் காரணம் என்னவென்றால்,  கல்லூரியில் தன்னை டானாக நினைந்து கொண்டவன் பற்றிய கதை, அவன் எப்போது தன்னை உண்மையாக டானாக உணர்ந்தான் என்பது தான் கதை. பெயரளவில் டானை தாண்டி, நிஜ வாழ்கையில் சிலர் தங்களது துறையில் டானாய் இருப்பார்கள், அவர்களை அடையாளப்படுத்துவது தான் டான். அதனால் தான் படத்தை வண்ணமயமாக உருவாக்கியுள்ளோம். மே 13 அன்று படத்தை தியேட்டரில் வந்து பாருங்கள். கோவிட்க்கு அப்புறம் தியேட்டருக்கு வந்து படத்தை பார்த்து வரவேற்பை கொடுத்த தமிழ்மக்களுக்கு நன்றி. அந்த வரிசையில் டான் படம் அமையவேண்டும் என விரும்புகிறேன். இயக்குனர் சிபிக்கு இது முதல் படம், அவருக்கு உங்களது ஆதரவு தேவை. உங்களுடய விமர்சனங்களை எதிர்பார்த்து காத்திருக்கிறேன், மக்களுடைய விமர்சனத்தையையும் எதிர்பார்க்கிறேன். நீங்கள் நல்ல விமர்சனங்களை தருவீர்கள் என எதிர்பார்க்கிறேன், நன்றி.

0 comments:

Pageviews