நடிகர் சூர்யா வெளியிட்ட “அக்னிச் சிறகுகள்” படத்தின் டீசர்

 


விஜய் ஆண்டனி - அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள “அக்னிச் சிறகுகள்” படத்தின் டீசரை நடிகர் சூர்யா வெளியிட்டார் ! 


நடிகர்கள் அருண் விஜய் மற்றும் விஜய் ஆண்டனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் ஆக்‌சன் த்ரில்லர் படமான ‘அக்னி சிறகுகள்’ படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யா தனது சமூக வலைதள பக்கத்தில் இந்த டீசரை வெளியிட்டார். 90 வினாடிகள் கொண்ட இந்த டீசர் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இயக்குநர் நவீன் M உடைய  ஸ்டைலிஷான உருவாக்கம், குறிப்பாக விஜய் ஆண்டனி & அருண் விஜய்யின் அதிரடியான திரை தோற்றம் ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை வழங்கியுள்ளது.


Amma Creations தயாரிப்பாளர் டி சிவா கூறியதாவது..,

“படத்தின் டீசரை வெளியிட்ட நடிகர் சூர்யாவுக்கு ஒட்டுமொத்த அக்னிச் சிறகுகள் குழு சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது எங்கள் முழு குழுவிற்கும் மிகவும் முக்கியமான நெருக்கமான மற்றும் சிறப்பு வாய்ந்த திரைப்படமாகும். இந்த திரைப்படத்தை உருவாக்குவது மிகுந்த  சவால்கள் நிறைந்த அனுபவமாக இருந்தது. தற்போது டீசருக்கு கிடைத்துள்ள அற்புதமான வரவேற்பைப் பார்ப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய் இருவருமே திரையில் மேஜிக்கை உருவாக்குவதில் வல்லவர்கள். இந்த படத்தில் அவர்கள் மிகவும் நம்பிக்கைக்குரியவர்களாகவும், திரையில் முற்றிலும் பிரமாண்டமாகவும் இருக்கிறார்கள். டீசரில் உள்ள குரல்வழி சொல்வது போல், இந்த திரைப்படம் இரண்டு கிளாடியேட்டர்களுக்கு சொந்தமானது, மேலும் அவர்களின் மாயாஜால திரை இருப்பு மற்றும் நடிப்பு பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும். இயக்குனர் நவீனின் அட்டகாசமான உருவாக்கத்தில் திரைப்படம் மிகவும் சிறப்பாக வெளிவந்துள்ளது. இத்திரைப்படம்  அவரை தமிழ் சினிமாவில் பெரும் உயரத்திற்கு கொண்டு செல்லும் என்றார்.

இந்த படத்தில் விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். மற்ற நட்சத்திர நடிகர்களில் அக்‌ஷரா ஹாசன், ரைமா சென், சம்பத், சென்ட்ராயன், ஜேஎஸ்கே மற்றும் பல வெளிநாட்டு மற்றும் இந்திய கலைஞர்களும் இணைந்து நடித்துள்ளார்கள். "அக்னி சிறகுகள்" படத்தினை Amma Creations  சார்பில் T.சிவா தயாரிக்க, இயக்குநர் நவீன் எழுதி இயக்குகிறார். படத்தின் இசை - M.நடராஜன் சங்கரன், ஒளிப்பதிவு - K.A.பாட்சா,  எடிட்டிங் - வெற்றி கிருஷ்ணன், நிர்வாக தயாரிப்பு - பரஞ்சோதி துரைசாமி ஆகியோர் தொழில்நுட்ப குழுவில் பணியாற்றியுள்ளனர். 

குறிப்பாக, விக்டர் இவனோவ் (ஆஸ்கார் விருது பெற்ற ஸ்டன்ட் இயக்குனர்), ஜைதர்பெக் குங்குஷினோவ் (ஸ்டண்ட்ஸ்), அலெக்சாண்டர் டெரெகோவ் (கார் சேஸ் நிபுணர்), பௌர்ஷான் அபிஷேவ் மற்றும் மகேஷ் மேத்யூ (இந்திய ஸ்டண்ட் ஒருங்கிணைப்பாளர்) ஆகியோர் ஸ்டண்ட் நிபுணர்களாக இப்படத்தில் பணியாற்றியுள்ளனர்.

விஜய் ரத்தினம் (ஒலி வடிவமைப்பாளர்), ரஹமப்துல்லா (ஒலி கலவை), சதீஷ் G (இரண்டாம் யூனிட் கேமராமேன்), R.கிஷோர் (கலை), அஜாஷ் புக்கடன் (ஆக்சன் எடிட்டர்), S. வர்மா ரகுநாத் (வண்ணக்கலைஞர்), யுகபாரதி-நவீன்-தெருக்குறள் அறிவு ( பாடல் வரிகள்), சௌபரணிகா (ஆடை வடிவமைப்பாளர்), சுரேஷ் சந்திரா, ரேகா டி'ஒன் (மக்கள் தொடர்பு), மற்றும் N.மகேந்திரன் (புரொடக்ஷன் எக்ஸிகியூட்டிவ்) ஆகியோர் இந்தப் படத்தில் மற்ற தொழில்நுட்ப வல்லுநர்களாக உள்ளனர்.


"அக்னி சிறகுகள்" திரைப்படம் ரஷ்யா, சுவிட்சர்லாந்து, கஜகஸ்தான் மற்றும் இந்தியாவில் (கொல்கத்தா) என பல இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.

0 comments:

Pageviews