கிச்சா சுதீப் நடிப்பில், “விக்ராந்த் ரோணா”
கிச்சா சுதீப் நடிப்பில், “விக்ராந்த் ரோணா”
இண்டர்னேஷனல் விநியோகத்தில் மிகப்பெரும் தொகையை பெற்று, வெளிநாட்டு விநியோகத்தில் சாதனை படைத்துள்ளது !
இந்த வருடத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களுல் ஒன்றான, கிச்சா சுதீப்பின் நடிப்பில், அனுப் பண்டாரி இயக்கியுள்ள 'விக்ராந்த் ரோணா' திரைப்படம், அதன் வெளியீட்டிற்கு முன்பே பார்வையாளர்களின் மனதில் ஒரு அற்புதமான முத்திரையைப் பதித்துள்ளது. படத்தைப் பற்றிய ரசிகர்களின் ஆவலை, உற்சாகத்தை உயர்த்துவதற்கான அறிவிப்புகளை படத்தின் தயாரிப்பாளர்கள் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர், இப்படம் ஜூலை 28 அன்று வெளியாகும் நிலையில், பெரிய கொண்டாட்டத்தை ரசிகர்களுக்கு கொண்டுவரப் போகிறது.
'விக்ராந்த் ரோணா' படத்தின் டீசர் வெளியானவுடனே இணையத்தில் டிரெண்டானது. 3டி மிஸ்டரி திரில்லர் திரைப்படமான ‘விக்ராந்த் ரோணா’ அதன் அற்புதமான விஷுவல் எஃபெக்ட்ஸ் மற்றும் அதிரடியான கதைக்களத்துடன் திரைப்பட ஆர்வலர்களுக்கு ஒரு புதிய உலகத்தைக் கொண்டு வரப் போகிறது. இந்நிலையில் இப்போது இப்படம் சர்வதேச சந்தையில் பெரும் தொகையைப் பெற்று சாதனை படைத்துள்ளது. வெளிநாட்டு சந்தை விநியோகத்தை ‘One Twenty 8 media’ கைப்பற்றியுள்ளது. ஒரு கன்னடப் படம் வெளியாவதற்கு முன்பே இவ்வளவு பெரிய விலையைப் பெற்றது இதுவே முதல்முறை. இப்படம் வெளியான பிறகு பாக்ஸ் ஆபிஸில் எப்படி அதிசயங்களை உருவாக்கப் போகிறது என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
இது குறித்து தயாரிப்பாளர் ஜாக் மஞ்சுநாத் கூறியபோது… ,
இப்படத்தின் கதை உலகளாவியது என்பதை நான் எப்போதும் நம்பி வருகிறேன். உலகம் முழுவதும் மக்களின் உணர்வுகள் ஒன்றாகவே இருக்கும் இப்படத்தின் இந்த ஒப்பந்தம் அதற்கு ஒரு சான்றாகும். இப்படத்தின் விற்பனையில் மிகுந்த மகிழ்ச்சியுடன் உள்ளேன் மற்ற விவரங்களை விரைவில் அறிவிப்பேன். இப்படத்தின் விற்பனை ‘இது ஒரு கன்னடப் படத்திற்கான அதிகபட்சத்தை தாண்டியதோடு, மற்ற தென்னிந்திய மொழிகளுக்கு இணையாக உள்ளது என்றார்.
விக்ராந்த் ரோணா திரைப்படம் உலகளவில் ஜூலை 28 ஆம்தேதி வெளியாகிறது. இயக்குநர் அனுப் பண்டாரி இயக்கத்தில் கிச்சா சுதீப், ஜாக்குலின் பெர்னாண்டஸ், நிரூப் பண்டாரி மற்றும் நீதா அசோக் நடித்துள்ள “விக்ராந்த் ரோணா” படத்தை ’ Zee studios வழங்க, Shalini Artss சார்பில் ஜாக் மஞ்சுநாத் தயாரிக்கிறார், Invenio Origins சார்பில் அலங்கார பாண்டியன் இணை தயாரிப்பு செய்துள்ளார்.
0 comments:
Post a Comment