விஷமக்காரன் விமர்சனம்

 


இந்த உலகில் எதுவுமே தானாக நடப்பதில்லை, நாம் உருவாக்கிக் கொள்வதுதான் நமது வாழ்க்கை என்பதுதான் படத்தின் மையக்கரு. அப்படியே நாயகன் தன் பேச்சினால் மற்றவர்களை தன்வயப்படுத்தி அவர்களது வாழ்க்கைப் பிரச்சினைகளை தீர்க்கும் லைப் கோச்சிங் தொழிலை மேற்கொண்டு வருகிறார்.


அவரிடம் தன் தோழியின் திருமண வாழ்வின் பிரச்சினையை தீர்க்க கேட்டு வருகிறார் நாயகி அணிக்கா விக்ரமன். அவரது அழகில் மயங்கும் வி அவளது தோழியின் பிரச்சனையை தீர்த்து வைப்பதுடன் நாயகியை காதலிப்பதாகவும் சொல்கிறார். அத்துடன் சைதன்யா ரெட்டியுடனான  தன் கடந்த கால காதலை பற்றியும் அவளிடம் சொல்கிறார.


ஒரு கட்டத்தில் அவரும், அனிக்காவும் திருமணம் செய்து கொள்ள அவரது முன்னாள் காதலி இப்போது அவர்கள் வாழ்க்கைக்குள் வர என்ன ஆகிறது என்பதுதான் கிளைமாக்ஸ்.


ஒரு சிகிச்சையாளர் வேடத்துக்கு பொருத்தமாக இருக்கிறார் வி. பார்வைக்கு ஆர்.கே போலிருக்கும் அவர் நடிக்கும்போது இயக்குனர் விஜய்யை நினைவு படுத்துகிறார். மொத்தத்தில் ஒரு ஐந்தே பாத்திரங்களை வைத்துக்கொண்டு படத்தை நகர்த்தியிருப்பது தில்லான விஷயம்.


இரண்டு நாயகி என்று வருகையில் நயன்தாரா, சமந்தா என்று போக வழியில்லா விட்டாலும் லட்டு லட்டாக இரண்டு புதுமுகங்களைப் பிடித்திருப்பது படத்தின் பலம். 


அவர்கள் இருவரில் யார் அதிக அழகு என்று போட்டியே வைக்கலாம். இருவரும் தேவைக்கு ஏற்றது போல் நடிக்கவும் செய்திருக்கிறார்கள்.


இரண்டாம் பாதி கதையும் கிளைமாக்ஸ் காட்சியும் சபாஷ் போட வைக்கிறது. முதல் பாதிப் படத்தில் பேசிப்பேசியே அலுப்பூட்டுகிறார்கள். அதிலும் ஆங்கில வசனங்கள் அதிகமாக வருவது சாமானிய ரசிகர்களை குழப்பவே செய்யும்.


அவுட்டோர் போகாமல் இண்டோரிலேயே முழுப்படத்தையும் எடுத்து இருப்பதும் படத்தின் குறை. இந்த குறைகளை தீர்த்து இருந்தால் பெரிய வெற்றிப் படமாக இருந்திருக்கும்.


இருந்தாலும் பலமான ஸ்கிரிப்ட் படத்தை காப்பாற்றி விடுகிறது.

0 comments:

Pageviews