ரங்கா திரை விமர்சனம்

 


சிபி, நிகிலா இருவரும் கண்டவுடன் காதல் கொள்கின்றனர். எந்த எதிர்ப்பும் இல்லாமல் திருமணம் நடக்கிறது. இருவரும் தேனிலவுக்கு காஷ்மீர் சென்று ஒரு சொகுசு ஓட்டலில் அறை எடுத்து தங்குகின்றனர். அந்த ஓட்டலில் ரகசிய கேமிரா வைத்து தேனிலவு ஜோடிகளின் அந்தரங்கங்களை ஒரு கூட்டம் பதிவு செய்து வெளிநாடுகளுக்கு விற்பனை செய்கிறது. இதை கண்டுபிடிக்கிறார் சிபி. இதுபற்றி ஓட்டல் மேனேஜரிடம் தட்டிக்கேட்கும்போது மேனேஜர் தனது ரவுடி கூட்டத்துக்கு தகவல் சொல்ல அந்த கூட்டம் சிபியையும், விமாலாவையும் கொல்ல துரத்துகிறது. உயிருக்கு பயந்து இருவரும் ஓட ஒரு இடத்தில் அவர்களை ரவுடி கூட்டம் சுற்றிவளைக்கிறது. சிபியை அடித்து தூக்கி வீசுகின்றனர். அந்த நேரம் சிபியிடம் இருக்கும் அபூர்வ சக்தியான அவரது வலது கை மட்டும் எதற்கும் அடிபணியாமல் தானாக இயங்கி ரவுடிகளை அடித்து துவம்சம் செய்கிறது. இறுதியில் ரவுடி கூட்டத்திடமிருந்து இருவரும் தப்பினார்களா? அந்தரங்க வீடியோக்கள் என்னவாகிறது? 

சிபிராஜ், நிகிலா விமல் இருவரும் படத்திற்கு என்ன தேவையோ அதை அறிந்து மிக சிறப்பாக நடித்திருக்கிறார்கள். வில்லன் மோனிஷ் ரெஹஜா கதைக்கு கச்சிதமாக பொருந்தியுள்ளார். எழுதி இயக்கியிருக்கும் வினோத்.டி.எல், ஒரு சின்ன மையக்கருவை வைத்துக்கொண்டு முதல் படத்திலேயே ஆக்‌ஷன் காட்சிகளில் அதிக ரிஸ்க் எடுத்து இயக்கி உள்ளார். ராம்ஜீவனின் இசையில் பாடல்கள் தரம். பின்னணி இசை படத்தின் பரபரப்பை அதிகரித்திருக்கிறது


Rating - 2.5/5

0 comments:

Pageviews