பூஜையுடன் துவங்கிய தளபதி 66 படப்பிடிப்பு

 


ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் சார்பில் தேசிய விருது பெற்ற தயாரிப்பாளர் தில் ராஜு மற்றும் சிரிஷ் இணைந்து தயாரிக்க, தேசிய விருது பெற்ற இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் 66வது படம் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாக இருக்கிறது.


இன்னும் பெயரிடப்படாத இந்த படம் இன்று மிகப்பெரிய அளவில் விமரிசையான பூஜையுடன் ஆரம்பமாகி உள்ளது. மேலும் இன்றே படப்பிடிப்பும் துவங்கியுள்ளது.


இந்த படம் குறித்த ஒவ்வொரு அறிவிப்புமே படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரிக்கவே செய்கிறது. தேசிய அளவில் புகழ்பெற்ற நடிகை ராஷ்மிகா மந்தனா இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். இவர்கள் தவிர இன்னும் பல முக்கிய நட்சத்திரங்கள் இந்த படத்தில் இணைந்துள்ளனர்.


அதேசமயம் திறமையான தொழில்நுட்பக் குழுவினரும் இந்த படத்திற்காக கைகோர்த்துள்ளனர். குறிப்பாக ரசிகர்களை ஆட்டம் போட வைக்கும் துள்ளலான இசை க்கு சொந்தக்காரரான இசையமைப்பாளர் தமன் இந்தப் படத்திற்காக அருமையான பாடல்களை தர இருக்கிறார். இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி தளபதி விஜய்க்காக முதன்முறையாக இதுபோன்ற ஒரு புதிய கதையை புத்திசாலித்தனமான தொழில்நுட்பத்தில் உருவாக்கி உள்ளார்.


இந்த படத்தின் கதையை வம்சி பைடிப்பள்ளியுடன் ஹரி மற்றும் அஹிஷோர் சாலமன் இணைந்து உருவாக்கியுள்ளனர். கார்த்திக் பழனி ஒளிப்பதிவை கவனிக்க, படத்தொகுப்பை தேசிய விருதுபெற்ற எடிட்டர் பிரவீன் கே.எல் மேற்கொள்ள இருக்கிறார்.


இந்த இப்படத்தின் இணை தயாரிப்பாளர்களாக ஸ்ரீ ஹர்ஷிதி ரெட்டி மற்றும் ஸ்ரீ ஹன்சிதா ஆகியோர் பொறுப்பு வகிக்க, சுனில் பாபு மற்றும் வைஷ்ணவி ரெட்டி இருவரும் தயாரிப்பு மேற்பார்வையை ஏற்றுக் கொண்டுள்ளனர்


அந்த வகையில் பிரபலமான நட்சத்திரங்கள் மற்றும் சக்திவாய்ந்த தொழில்நுட்ப கலைஞர்களுடனும் உருவாக இருக்கும் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு உள்ளாகி இருக்கிறது என்றே சொல்லலாம்.


மேலும் படம் குறித்த மற்ற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.


தொழில்நுட்ப குழுவினர் விபரம்


இயக்கம் ; வம்சி பைடிப்பள்ளி

கதை / திரைக்கதை ; வம்சி பைடிப்பள்ளி – ஹரி - அஹிஷோர் சாலமன்

தயாரிப்பு ; ராஜூ-சிரிஷ்

தயாரிப்பு நிறுவனம் ; ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்

இணை தயாரிப்பு ; ஸ்ரீ ஹர்ஷிதி ரெட்டி - ஸ்ரீ ஹன்சிதா

இசை ; S.தமன்

ஒளிப்பதிவு ; கார்த்திக் பழனி

படத்தொகுப்பு ; K.L.பிரவீண்

வசனம் / திரைக்கதை உதவி ; விவேக்

தயாரிப்பு மேற்பார்வை ; சுனில்பாபு - வைஷ்ணவி ரெட்டி

நிர்வாக தயாரிப்பு ; பி.ஸ்ரீதர் ராவ் – ஆர்.உதயகுமார்

ஒப்பனை ; நாகராஜூ

ஆடை வடிவமைப்பு தீபாலி நூர்

விளம்பரம் ; கோபி பிரசன்னா

விஎப்எக்ஸ் ; யுகேந்தர்

மக்கள் தொடர்பு - ரியாஸ் கே அஹ்மத்  

0 comments:

Pageviews