சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் 'அழகிய கண்ணே' படத்தின் படப்பிடிப்பு நிறைவு !
தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ அவர்கள் "எஸ்தல் எண்டர்டெய்னர்" நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கும் திரைப்படம் "அழகிய கண்ணே". இத்திரைப்படத்தை இயக்குநர் சீனு ராமசாமியின் துணை இயக்குனர் R.விஜயகுமார் இயக்குகிறார்.
லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடிக்கிறார் .இவருக்கு ஜோடியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார். மக்கள்செல்வன் விஜய்சேதுபதி மற்றும் இயக்குநர் பிரபுசாலமன் ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில்நடிக்கிறார்கள்.
பல திருப்பங்கள் கொண்ட ஒரு இளைஞனின் காதல் கதையை மையமாக கொண்ட இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் சிங்கம்புலி, இயக்குநர் ராஜ்கபூர், காதல் சுகுமார், விஜய் டிவி ஆன்டிருவ்ஸ் , அமுதவானன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது .
கவிப்பேரரசு வைரமுத்து பாடல்கள் எழுத, N.R.ரகுநந்தன் இசையமைக்கிறார். காடன் திரைப்பட ஒளிப்பதிவாளர் A.R.அசோக் குமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பினை பிரபல படத் தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத்தின் மாணவர் சங்கத் தமிழன் கவனிக்கிறார். சண்டை பயிற்சி ஸ்டண்ட் சில்வா .
தொழில்நுட்பக்குழு :
இயக்கம் - R.விஜயகுமார்
தயாரிப்பு - சேவியர் பிரிட்டோ ( எஸ்தல் எண்டர்டெய்னர்)
பாடல்கள் - வைரமுத்து
இசை - N.R.ரகுநந்தன்
ஒளிப்பதிவு - A.R.அசோக் குமார்
படத்தொகுப்பு - சங்கத் தமிழன்
சண்டை பயிற்சி - ஸ்டண்ட் சில்வா
கலை இயக்கம் - விஜய் தென்னரசு
நடனம் - ராதிகா
தயாரிப்பு மேற்பார்வை - இளையராஜா செல்வம்
மக்கள் தொடர்பு - ரியாஸ் கே அஹ்மத்
0 comments:
Post a Comment