Amazon Prime ல் வெளியாகும் “ராதே ஷியாம்”ராதே கிருஷ்ணா குமார் இயக்கத்தில், UV கிரியேஷன்ஸ் தயாரித்து கோபி கிருஷ்ணா மூவிஸ் வழங்கும் வெளிவந்துள்ள காதல் கதை களம் கொண்ட ராதே ஷியாம் திரைப்படத்தில் பிரபாஸ், பூஜா ஹெக்டே, சச்சின் கெடேகர், பிரியதர்சி புலிகொண்டா, பாக்யஸ்ரீ, ஜெகபதி பாபு, முரளி ஷர்மா, குணால் ராய் கபூர், ரித்தி குமார், சாஷா செத்ரி, சத்யன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்தியாவிலும், உலகெங்கிலும் உள்ள 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள Prime மெம்பர்கள் உறுப்பினர்கள் ஏப்ரல்-1 முதல் தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ராதே ஷ்யாமின் டிஜிட்டல் பிரீமியரை ஸ்ட்ரீம் செய்யலாம்.


சமீபத்திய மற்றும் பிரத்யேகத் திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை, Amazon Originals, Amazon Prime Music மூலம் விளம்பரமில்லா மியூசிக், இந்தியத்தயாரிப்புகளின் மிகப் பெரிய கலெக்ஷனின் இலவச விரைவான டெலிவரி, சிறந்த டீல்களுக்குமுன்கூட்டிய அணுகல், வரம்பற்ற வாசிப்புக்கு PRIME Reading மற்றும் மொபைல் கேமிங் உள்ளடக்கம் கொண்ட PRIME Gaming இவை அனைத்தும் ஆண்டுக்கு ரூ. 1499 என்ற கட்டணத்தில் Prime மெம்பர் சந்தாவில் கிடைக்கிறது. Prime Video மொபைல் பதிப்பிற்குச் சந்தா செலுத்துவதன் மூலம் வாடிக்கையாளர்கள் ராதே ஷ்யாம் திரைப்படத்தைக் கண்டு ரசிக்க முடியும். Prime Video மொபைல் பதிப்பு Airtel ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்குத் தற்போது கிடைக்கக்கூடிய ஒற்றைப் பயனர், மொபைல் மட்டுமே திட்டமாகும்.


மும்பை, இந்தியா- மார்ச், 28, 2022- பிரபாஸ் நடிப்பில் வெளிவந்துள்ள ராதே ஷ்யாம் திரைப்படத்தின் டிஜிட்டல் ப்ரீமியரை Prime Video இன்று அறிவித்துள்ளது. ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில் மற்றும் UV கிரியேஷன்ஸ் மற்றும் டி-சீரிஸ் தயாரித்துள்ள, காதல் கதைக் களம் கொண்ட இச்சித்திரத்தில் பூஜா ஹெக்டே, பாக்யஸ்ரீ, சச்சின் கெடேகர் மற்றும் குணால் ராய் கபூர் ஆகியோரும் நடித்துள்ளனர். வாழ்க்கைக்கான அணுகுவதில் முற்றிலும் மாறுபட்ட கண்ணோட்டத்தைக் கொண்ட இருவரின் காதல் கதை இது. விதியையும் ஊழ்வினையையும் முழுமையாக நம்பும் விக்ரம் ஆதித்யா (பிரபாஸ்) அறிவியலின் சக்தியைப் பெரிதும் நம்பும் பிரேர்னாவிடம் (பூஜா ஹெக்டே) காதலில் விழுகிறார். ராதே ஷியாம் திரைப்படத்தை ஏப்ரல் 1, 2022 முதல் தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ஸ்ட்ரீம் செய்யலாம்.


“புதுயுகத்தின், எல்லைகளில்லா சினிமாவைக் கச்சிதமாக எதிரொலிக்கும் கதையே ராதே ஷ்யாம்” என்கிறார் நடிகர் பிரபாஸ். அவர் மேலும் கூறுகையில் “தொலைநோக்குப் பார்வையுடன் செயலாற்றும் இயக்குனர் ராதா கிருஷ்ணா, பூஜா ஹெக்டே மற்றும் எங்கள் மொத்த குழுவினரும் தங்கள் உழைப்பைச் செலவிட்டு அனைவரும் அனுபவிக்கும் வகையில் இத்திரைப்படத்தை உருவாக்கியுள்ளனர். டிஜிட்டல் வெளியீட்டின் மூலம் இந்தக் காதலை உங்களிடம் கொண்டு வருவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், மேலும் உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களிடமிருந்து அன்பையும் ஆதரவையும் தொடர்ந்து பெறுவதை எதிர்பார்க்கிறேன்.” என்றார்.


0 comments:

Pageviews