அபய் சீசன் 3 டிரைலர் இப்போது வெளியாகியிருக்கிறது – ஜீ 5 இன் (ZEE5) தலைசிறந்த ஃப்ராஞ்ச்சைஸ் மூலம் அபய் பிரதாப் சிங்காக குணால் கெம்மு மீண்டும் வருகை தருகிறார்
~ கென் கோஷ் இயக்கத்தில் உருவான, அபய் எஸ் 3 இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஏப்ரல் 8 ஆம் தேதி ஜீ 5 (ZEE5) இல் முதல் முதலாக திரையிடப்படும் ~
உள்நாட்டில் உருவான இந்தியாவின் மிகப்பெரிய OTT இயங்குதளமான ஜீ5(ZEE5), அபய் 3 இன் டிரெய்லரை வெளியிட்டது மற்றும் இதன் காட்சிகளைக் காணும் போதே இந்த சீசன் இன்னும் ஒரு கூடுதலான துணிச்சல் மிக்க, மிக இருண்ட மற்றும் கட்டுப்பாடுகள் அற்ற சீசனாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கலாம். இரண்டு வெற்றிகரமான மற்றும் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட சீசன்களுக்குப் பிறகு, அதிரடி பாணியில் தனக்கென தனித்துவமான ஒரு இடத்தை அபய் ஃப்ராஞ்ச்சைஸ் உருவாக்கியுள்ளது. தற்போது, முதல்காட்சியின் வெளியீட்டுத் தேதி ஏப்ரல் 8 என நிர்ணயிக்கப்பட்ட நிலையில், சீசன் 3வெளியீட்டை எதிர்பார்த்து காத்திருந்த காலம் முடிவுக்கு வந்துள்ளது. கென் கோஷ் இயக்கத்தில் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவான, அபய் எஸ் 3 இல் குணால் கெம்மு, ஆஷா நேகி மற்றும் நிதி சிங் ஆகியோர் மீண்டும் அதே பாத்திரங்களில் தோன்றுகிறார்கள் மற்றும் விஜய் ராஸ், ராகுல் தேவ், வித்யா மால்வதே, தனுஜ் விர்வானி மற்றும் திவ்யா அகர்வால் ஆகியோர் புதிய பாத்திரங்களில் தோன்றுகிறார்கள்.
குணால் கெம்மு ஒரு உறுதி பூண்ட காவலராகத் மீண்டும் தோன்றுகிறார், தனது தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைமுறைகளை சமநிலைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் போது புதிய பல அறியப்படாத அச்சுறுத்தல்களை அபய் பிரதாப் சிங் எதிர்கொள்கிறார். ஆஷா நேகி மீண்டும் சோனமாகதோன்றும் அதேவேளையில், அபயின் நேரடி அம்பாக செயல்படும் சக காவலர் குஷ்புவாக நிதி சிங் தோன்றுகிறார். இந்த சீசனில், பக்திமிக்க சீடர்கள்(வித்யா மால்வடேயின் கதாபாத்திரம், நிதி உட்பட). பின் தொடரும் வழிபாட்டு கோட்பாடுகளையும் மர்மமான அகங்காரமிக்க மாற்று மனதையும் கொண்ட நகரத்தின் உளநோய் காப்பக தலைமை மனநல மருத்துவரான டாக்டர் ஆனந்த் சின்ஹா (விஜய் ராஸ் நடிப்பில்), வின் அறிமுகத்தை இந்த சீசன் காணவிருக்கிறது. அபய்க்கு அச்சுறுத்தலாக இருக்கக் கூடிய அஞ்சாத போராளி, குறிதவறாத துப்பாக்கி சுடும் வீரர் பாத்திரத்தில் ராகுல் தேவ் தோன்றும் அவதார் என்ற கதாபாத்திரமும் இதில் அமைந்துள்ளது. . மேலும் கடைசியாக, சமூக ஊடகங்களில் ஆனால் அதன் இருண்ட பக்கங்களில் செல்வாக்கு செலுத்தும் ஹர்லீன் மற்றும் கபீர் பாத்திரங்களில், திவ்யா அகர்வால் மற்றும் தனுஜ் விர்வானி ஆகியோரும் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.
எப்போதுமில்லாத வகையில் அபய் ஒரு புதிய தீய இனத்தை எதிர்கொள்ளப்போவதால், இந்தப் சீசன் மற்ற சீசங்களைப் போல் அல்லாமல் தனித்துவமாக விளங்கும்; கருத்தியல் சார்ந்த நம்பிக்கையை திருத்தியமைக்கும் முயற்சியில் எவர் ஒருவரையும் ஆட்டிப்படைக்கும் ஒரு இருண்ட சக்தியாக இது உள்ளது. மரணத்தோடு நடத்தப்போகும் இந்தப் போரில் அபய் வெற்றி பெறுவாரா? காணக் காத்திருங்கள்!
அபய் எஸ்3 டிரைலர் -
கென் கோஷ் கூறுகையில், "வெற்றிகரமான 2 சீசன்களுக்குப் பிறகு, முந்தைய சீசன்களின் வெற்றியை முறியடிக்கத் தேவையான புதிய யுக்திகளை மேற்கொள்ளுவது எப்போதுமே சவால்கள் நிறைந்தது., ஆனால் கடினமாக உழைக்க சவால்கள் எப்போதுமே உங்களை உந்தித் தள்ளுகிறது. எஸ்3 இன் படப்பிடிப்பு மற்றும் தொகுப்பு நடைமுறைகள் இப்போது, முடிந்த நிலையில் எஸ்3 இன் மற்றொரு பரபரப்பான மயிர்க்கூச்செறியும் பயணத்தை ரசிகர்கள் அனுபவிக்கப் போகிறார்கள் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன், அதுவும், அற்புதமான நடிகர்களின் பாத்திரப்படைப்போடு கூடிய இது ரசிகர்களை இருக்கையின் நுனியிலேயே இருக்கச்செய்யும்”
குணால் கெம்மு கூறுகையில், “இருண்ட அத்தோடு மேலும் கொடிய தீங்கு கொண்டதாக குற்றங்கள் விளைவதால் அபய் சீசன் 3 இன் மதிப்பு மேலும் உயர்ந்ததாக இருக்கும். மேலும் தனது தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்திருப்பதால் ஒரு இடர்பாடான திருப்ப மையத்தில் தீர்மானிக்க வேண்டிய நிலையில் அபய் நிற்கிறார். புதிய பிரதேசத்தில் பயணிக்கும் ஒரு அற்புத அனுபவத்தை பார்வையாளர்களுக்கும் அபய்க்கும் இந்த சீசன் வழங்கும். அத்துடன் சேர்த்து இந்த புதிய நடிகர்களின் உற்சாகமளிக்கும் கூட்டணியும் அமைந்துள்ளது. . இந்த நிகழ்ச்சிகளை விரும்பும் ரசிகர்களுக்கும், இது கண்டடையப் போகும் புதிய பார்வையாளர்களுக்கும் இந்த புதிய சீசனை வழங்குவதில் நான் படபடப்பாகவும் மிகவும் கிளர்ச்சியடைந்தும் இருக்கிறேன்” என்று தெரிவித்தார்.
விஜய் ராஸ் கூறுகையில் “பார்வையாளர்கள் இதுவரை பார்த்திராத ஒரு இருண்ட திருப்பங்கள் நிறைந்ததாக அபய் எஸ் 3 அமைந்துள்ளது. மனதைக் கொள்ளைகொள்ளும் ஒரு மாற்று உலகத்தை கென் உருவாக்கியுள்ளார், அதன் ஒரு பகுதியாக விளங்குவதில் நாம் அனைவரும் மகிழ்ச்சியடைகிறோம். குற்றப்பின்னணி கொண்ட பரபரப்பான ஒரு பாணியை அடுத்த ஒரு உச்ச கட்டத்துக்கு அபய் நகர்த்திச் செல்கிறது, மேலும் இந்த சீசனில் என்னென்ன உருவாகின்றன என்பதை அறிவது மிகவும் உற்சாகத்தை அளிக்கும்.
அபய் எஸ் 3 ஐ 2022 ஏப்ரல் 8 முதல் ஜீ5 (ZEE5) இல் தனிப்பட்ட முறையில் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் காணுங்கள் .
0 comments:
Post a Comment