Valimai Movie Review & Rating

 


தங்கச் சங்கிலி பறிப்பு, சில நொடிகளில் கொலை, போதைபொருள் கடத்தி சப்ளை செய்தல் என எக்குத்தப்பான ஏ 1 குற்றங்களை சென்னையை மையமாக வைத்துச் செய்யும் பைக்கர் குழுவுக்கும், வேர் வரை சென்று அவர்களை வேட்டையாடிக் களையும் காவல் துணை ஆய்வாளருக்குமான ஆக்‌ஷன் - செண்டிமெண்ட் கலந்த ஆட்டமே வலிமை.


கள்ளழகர் இறங்குவதற்கு ஒலிக்கும் மேளதாளங்களின் ஒலியில், அஜித் எண்ட்ரி ஆகும் போது, எந்த அஜித் ரசிகரும் கட்டுப்படுத்தி நாற்காலியில் அமர முடியாது. அந்த அளவிற்கு தொடங்கும் ஆர்ப்பரிப்பு, அதன் பின் சென்னை சென்றதும்  அதிக சேஸ்... அதிக ரேஸ்... அதிக மாஸ். ஒரு போலீஸ் அதிகாரி, தன் பணிக்கான கடமையையும், குடும்பத்திற்கான கடமையையும் வலிமையோடு கையாள படும் கஷ்டமே வலிமை! குற்றவாளிகள் தரப்பு நியாயத்தையும், பொதுமக்கள் தரப்பு தவறுகளையும் ‛நாம தான் சிஸ்டம்... நாம தான் சரியா இருக்கனும்’  என, பாலிடிக்ஸ் பேசுவதில் இருந்து, ‛கடவுள் தான் சாத்தான்... சாத்தான் தான் கடவுள்’ என டயலாக் வைத்தது வரை, இயக்குனரின் ஷார்ப் வசனங்கள் மாஸ் ரகம். 


ஹீமா குரேஷி, வலிமையில் வளமாக தெரிகிறார். அஜித்திற்கு அவர் தோழியா, காதலியா, இல்லை அதை தாண்டி வேறு எதுவும் உறவா... என்கிற குழப்பம் படம் முடிந்தும் வரும். உடன் பணியாற்று போலீஸ் அதிகாரியாக, அவரும் தனக்கான பணியை செய்திருக்கிறார். படத்தில் கண்டிப்பாக பாராட்டப்பட வேண்டியது, பைக்கோடு பயணிக்கும் கேமராவை சுமந்த நிரவ் ஷா,  அதே போல் தான் ஸ்டண்ட் மாஸ்டர் திலிப் சுப்புராயனும். ஆக்ஷன் காட்சிகள் பாதி, ஆகாயத்தில் தான் நடக்கிறது. இதையெல்லாம் சேதாரம் இல்லாமல் எடுக்க வாய்ப்பே இல்லை. அதற்காகவே தனியா திலிப்பை பாராட்டலாம். இன்னொருவர், யுவன் சங்கர் ராஜா. படத்தில் புதிய அம்மா பாடல் ஒன்று வருகிறது. அதுவும் கேட்கும் படியாக இருக்கிறது. பின்னணியை சொல்ல வேண்டியதில்லை.


ஆனாலும், எத்தனை குறை இருந்தாலும் அத்தனையையும் தன் தோலில் சுமந்து, கடைசி வரை தான் ஒரு வலிமையானவன் என்பதை நிரூபித்திருக்கிறார் அஜித் குமார். 


Rating - 3/5

0 comments:

Pageviews