விஜய்சந்தர் தயாரிப்பில் ஹன்சிகா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது!

 


வாலு, ஸ்கெட்ச் ,சங்கத்தமிழன் போன்ற படங்களை இயக்கிய விஜய் சந்தர் தற்போது தயாரிப்பாளராக களமிறங்கியுள்ளார்.

ஃபிலிம் வொர்க்ஸ் நிறுவனம்  சார்பில் விஜய்சந்தர் தயாரிக்கும் முதல் படத்தில் ஹன்சிகா கதாநாயகியாக நடிக்கிறார்.

இந்தப் படத்தை இயக்குனர்கள் சபரி கிரீசன் , சரவணன் இயக்குகிறார்கள். (கூகுள் குட்டப்பன்).

பிரபல ஒளிப்பதிவாளர் சக்தி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது. தயாரிப்பாளர் கலைப்புலி S தாணு கேமராவை இயக்க, விஜய் சேதுபதி  கிளாப் போர்டை அடிக்க, KS ரவிக்குமார் முதல் காட்சியை இயக்கினார்.

இதர நடிகர்கள் மற்றும் தொழிநுட்பக்கலைஞர்கள் விவரம் விரைவில் வெளியாகும்

0 comments:

Pageviews