சர்வதேச அளவில் சூப்பர் ஹிட்டான ‘மாடர்ன் லவ்’ தொடரின் இந்தியத் தழுவல் தொடரை Amazon Prime Video அறிவித்துள்ளது

 


மாடர்ன் லவ்: மும்பை (இந்தி), மாடர்ன் லவ்: சென்னை (தமிழ்) மற்றும் மாடர்ன் லவ்: ஹைதராபாத் (தெலுங்கு) ஆகியவற்றுடன் காதல் அனைவரின் இல்லங்களிலும் அடி எடுத்து வைக்கிறது, இது பிரபல நியூயார்க் டைம்ஸ் கட்டுரைகள் மற்றும் சர்வதேசத் தொடர்களின் அடிப்படையிலான மாடர்ன் லவ்வின் உள்ளூர்மயமாக்கப்பட்ட இந்தியப் பதிப்பாகும்.


2022-இல் 240+ நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் வெளியிடப்படத் திட்டமிடப்பட்டுள்ள இந்தத் தொடர் காதல் உணர்வுகளைச் சித்தரிக்கும் பல்வேறு கதைகளைக் கொண்டிருக்கும்.


மும்பை, இந்தியா, பிப்ரவரி-14, 2022— சர்வதேச ஹிட் தொடரான ‘மாடர்ன் லவ்’-இன் இந்தியத் தழுவல் தொடர் குறித்த அறிவிப்பை வெளியிடுவதன் மூலம் Amazon Prime Video இந்த ஆண்டு உங்கள் இல்லங்களை அன்பால் நிரப்பத் திட்டமிட்டுள்ளது. இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் வெளிவரவுள்ள இத் தொடருக்கு ‘மாடர்ன் லவ்: மும்பை’, ‘மாடர்ன் லவ்: சென்னை’ மற்றும் ‘மாடர்ன் லவ்: ஹைதராபாத்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. பிரபல பத்திரிகையில் வந்த கட்டுரைகளைத் தழுவி உருவாகியுள்ள இத் தொடரின் ஒவ்வொரு அத்தியாயமும் காதல், ஈர்ப்பு, சுய பக்தி, குடும்ப பாசம், நண்பர்கள் மீதான அன்பு வரை பல மனித உணர்வுகளைக் கதைகள் மூலம் வெளிப்படுத்தும் பயணத்தில் பார்வையாளர்களை அழைத்துச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தொடர் 240+ நாடுகள் மற்றும் பிரதேசங்களில் வெளியிடப்பட உள்ளது.


Amazon Studios, லோக்கல் ஒரிஜினல்ஸ் துறைதலைவர் ஜேம்ஸ் ஃபாரெல் கூறுகையில், "காதலுக்கு எல்லைகள் இல்லை, இது உலகளாவிய மொழி. மாடர்ன் லவ் ஆனது காதலின் பல்வேறு வடிவங்களின் கவிநயம் சார்ந்த வெளிப்பாடாகும். உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்கள் எங்கள் அமெரிக்க நிகழ்ச்சியின் கதைகளுடன் தங்களைத் தொடர்புபடுத்தி ரசிப்பதை நாங்கள் பார்த்திருக்கிறோம், இந்தியாவின் பல்வேறு கலாச்சாரம், இந்தத் தொடருக்கு இயல்பாகவே கைகொடுக்கிறது. இந்தியத் தழுவல்களும் அதேபோன்று எங்கள் வாடிக்கையாளர்களுடன் ஒரு நல்லுறவை தொடும் என்று நாங்கள் நம்புகிறோம்.” என்கிறார்.



Amazon Prime Video இந்தியா ஒரிஜினல்ஸ் தலைவர் அபர்ணா புரோஹித் கூறுகையில், “இந்தியா அன்பு மற்றும் காதலின் வெளிப்பாட்டுக்குப் பெயர் பெற்ற தேசம் - எங்கள் இந்தியத் தழுவல்களுடன் இந்திய மண்ணில் வேரூன்றியிருக்கும் காதல் கதைகளை இந்தியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்குக் கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். பல மொழிகளில் உருவாகும் இந்தத் தொடர், காதலின் பற்பல வடிவங்களை அலசுவதாக இருக்கும். இந்த மனதைக் கவரும் கதைகள் புகழ்பெற்ற நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையிலிருந்து தழுவி எடுக்கப்பட்டாலும், இந்திய மண்ணுக்கு ஏற்றவாறு உள்ளன, மும்பை, சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகிய பெருநகரங்கள் இதற்குச் சரியாகப் பொருந்துகின்றன. இந்தியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள எங்கள் வாடிக்கையாளர்களுக்கு இந்த நம்பமுடியாத கதைகளைக் கொண்டு வருவதில் நாங்கள் மிக மகிழ்ச்சியடைகிறோம்.” என்றார்.


தி நியூயார்க் டைம்ஸில் மாடர்ன் லவ் பத்திரிகையின் ஆசிரியர் டேனியல் ஜோன்ஸ் கூறுகையில்: “காதல் இந்திய கலாச்சாரக் கட்டமைப்பின் முக்கிய அங்கமாக உள்ளது. எங்களின் இக்காதல் கதைகள் இந்திய மண்ணுக்கு ஏற்ப தழுவி எடுக்கப்பட்டுள்ளதை அறிவது உற்சாகமாகவும், பெருமையாகவும் இருக்கிறது. மாடர்ன் லவ் தொடர் உலகளவில் பெற்ற பாராட்டுக்களால் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த இந்திய தழுவல்கள் உலகளாவிய காதல் உணர்வுகளை இந்நாட்டுக்கு வெளிப்படுத்தும் ஒரு காதல் வெளிப்பாடாக அமையும்.” என்றார்.

0 comments:

Pageviews