சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடிக்கும் 150வது பிரமாண்ட திரைப்படம் தி ஸ்மைல் மேன் - The Smile Man

மேக்னம் மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் சலீல் தாஸ் தயாரிப்பில், இயக்குனர் ஷ்யாம் - பிரவீன் இயக்கத்தில், சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடிப்பில் அவரது 150வது சிறப்பு திரைப்படமாக உருவாகிறது  “தி ஸ்மைல் மேன்” (The Smile Man).

தமிழ் சினிமாவில் 100 படங்களை கடந்து முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் வெகு சில நடிகர்களில் ஒருவரான சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் திரைவாழ்வில், சாதனை படைப்பாக பிரமாண்ட பட்ஜெட்டில், அவரது 150 வது படமாக இப்படம் உருவாகிறது.  

அம்னீஷியா நோயால் பாதிக்கப்படும், ஓய்வு பெற்ற  ஒரு முன்னாள் காவல் அதிகாரி, தனது நினைவுகள் முழுதாக மறந்து போகுமுன், ஒரு சிக்கலான மிக முக்கியமான வழக்கை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறார். முழுக்க முழுக்க இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில் இப்படம் உருவாகவுள்ளது. 

சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் முதன்மை வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் சிஜா ரோஸ், இனியா,ராஜ்குமார்,  ஜார்ஜ் மரியான், சுரேஷ் மேனன், குமார் நடராஜன், ரௌடி பேபி புகழ் பேபி ஆழியா ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். மெமரீஸ் படப்புகழ் ஶ்ரீகுமார் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். 

8 தோட்டாக்கள் வெற்றி நடிப்பில் மெமரீஸ் படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் கூட்டணி இப்படத்தை இயக்குகின்றனர். ஸ்க்ரிப்ட் வசனத்தை ஆனந்த் எழுதுகிறார். ஶ்ரீ சரவணன் ஒளிப்பத்திவு செய்ய, ஷான் லோகேஷ் படத்தொகுப்பு செய்கிறார். ‘க்’ படப்புகழ் கவாஸ்கர் அவினாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். கலை இயக்கத்தை அய்னா. J. ஜெய்காந்த் கவனிக்க, உடை வடிவமைப்பை M. முகம்மது சுபையர் செய்கிறார், மேக்கப் பணிகளை வினோத் சுகுமாரன் செய்ய, புரடக்சன் மேனேஜராக முகேஷ் சர்மா பணியாற்றுகிறார். ஒலி வடிவமைப்பை ஸிங்க் சினிமா  (SYNC CINEMA) செய்ய, மக்கள் தொடர்பு  - சதீஷ் (AIM). விளம்பர டிசைன் பணிகளை அதின் ஒல்லூர் செய்கிறார். தீபா சலீல் இணை தயாரிப்பு செய்கிறார். மேக்னம் மூவிஸ் சார்பில் சலீல் தாஸ் இப்படத்தை  தயாரிக்கிறார்.

0 comments:

Pageviews