வார்னர் மியூசிக் இந்தியா (Warner Music India) நிறுவனம், அமேசான் ஒரிஜினல் (Amazon Original) சீரிஸான “ புத்தம் புது காலை விடியாதா”

 


அமேசான் பிரைம் வீடியோ சமீபத்தில் அதன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் ஆந்தாலஜி தொடரான “புத்தம் புது காலை விடியாதா”தொடரின்,  பல இசையமைப்பாளர்கள் இணைந்து இசையமைத்த ஆல்பத்தை  அறிமுகப்படுத்தியது. இந்த ஆல்பம் தமிழ் திரைத்துறையில் மிகவும் திறமையான மற்றும் நம்பிக்கைக்குரிய இசைக் கலைஞர்களால் இசையமைக்கப்பட்டுள்ளது. வார்னர் மியூசிக் இந்தியா (WMI) அமேசான் ஒரிஜினல் சீரிஸின் இசை பங்குதாரராக, கூட்டாளியாக இணைந்து செயல்படவுள்ளது. வடக்கு, மத்திய மற்றும் மேற்கு இந்தியாவில் அதன் வலுவான துவக்கத்தை, தெற்கு சந்தைகளில் வார்னர் மியூசிக் நுழைவை WMI இது குறிக்கிறது.


புத்தம் புது காலை விடியாதா… ஆல்பத்தில் 6 பாடல்கள் உள்ளன - ஒரு தலைப்புப் பாடல் மற்றும் ஒவ்வொரு கதைக்கும் ஒரு பாடல் வீதம் 5 பாடல்கள் உள்ளன. பன்முகத் திறமையாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் ‘புத்தம் புது காலை விடியாதா' ஆந்தாலஜியின் தலைப்பு பாடலை உருவாக்கி பாடியுள்ளார். ரிச்சர்ட் ஆண்டனியின் ‘நிழல் தரும் இடம்’ படத்திற்கு பிரதீப் குமார் ஒரு பாடலை  இசையமைத்து பாடியுள்ளார். இயக்குநர் பாலாஜி மோகனின் ‘முககவச முத்தம்’ படத்திற்காக ஷான் ரோல்டன் ‘கிட்ட வருது’ பாடலை இசையமைத்து பாடியுள்ளார், ஹலிதா ஷமீமின் ‘லோனர்ஸ்’ படத்திற்காக கௌதம் வாசு வெங்கடேசன் ‘தனிமை என்னும்’ பாடலையும், சூர்யா கிருஷ்ணாவின் ‘தி மாஸ்க்’ படத்திற்கு கபேர் வாசுகியும், ‘முகமூடி’ பாடலை எழுதி, இசையமைத்துள்ளார். கார்த்திகேயா மூர்த்தி “விசிலர்” பாடலை இயக்குநர் மதுமிதாவின் “மௌனமே பார்வையாய்” படத்திற்காக இசையமைத்து பாடியுள்ளார்.


வெவ்வேறு மனநிலைகளை பிரதிபலிக்கும், வெவ்வேறு  பாணியிலான இசையில் அமைந்துள்ள, பல்வேறு இசையமைப்பாளர்கள் இணைந்து இசையமைத்திருக்கும் இந்த ஆல்பத்தின் இசை, நேர்மறை எண்ணத்தை வளர்ப்பதாகவும், சிக்கலான சமயங்களை கடக்க உதவும், மனித ஆத்மாவின் சக்தியை எடுத்துக்காட்டுவதாகவும் அமைந்துள்ளது. புத்தம் புதுக் காலை விடியாதா… என்பது கடந்த ஆண்டு வெளியான ‘புத்தம் புதுக் காலை’ தொடரின் கதையை முன்னோக்கி எடுத்துச் செல்லும்  ஒரு தமிழ் தொடர் ஆகும், இது ஒவ்வொரு தனி நபரின் நம்பிக்கை மீதான பயணம் மற்றும் மனித உறவுகளுடன் கூடிய  புதிய தொடக்கங்ளை மையமாக கொண்ட கருப்பொருளில் கதைகளை சொல்கிறது. முதல் தொடரினைப் போலவே, இந்த அமேசான் ஒரிஜினல் சீரிஸ் என்பது 5 தனித்த கதைகளின் தொகுப்பாகும். இந்தியாவில் தொற்றுநோய் காலகட்டத்தின் போது, இரண்டாவது லாக்டவுனில் அமைக்கப்பட்ட கதைகளில் ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, அர்ஜுன் தாஸ், திலிப் சுப்பராயன், கௌரி G கிஷன், ஜோஜு ஜார்ஜ், லிஜோமோல் ஜோஸ், நதியா மொய்து, நிர்மல் பிள்ளை, சனந்த் மற்றும் டீஜே (TeeJay), அருணாசலம் ஆகியோர் நடித்துள்ளனர், மேலும் இயக்குநர்கள் பாலாஜி மோகன், ஹலிதா ஷமீம், மதுமிதா, ரிச்சர்ட் ஆண்டனி மற்றும் சூர்யா கிருஷ்ணா ஆகியோர் இத்தொடரை இயக்கியுள்ளனர். “புத்தம் புது காலை விடியாதா… “ அமேசான் பிரைம் வீடியோவில் ஜனவரி 14, 2022 அன்று உலகமெங்கும் பிரத்யேகாமாக  வெளியாகிறது, இதன் இசை இப்போது அனைத்து மியூசிக் ஸ்ட்ரீமிங் தளங்களிலும் வெளியாகியுள்ளது.

0 comments:

Pageviews