புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ பேஷன் ஷோ நடத்தும் இலங்கேஸ்வரி முருகன்

 


தமிழ்நாடு மற்றும் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை பட்டியலில் இடம் பிடித்தவர் இலங்கேஸ்வரி முருகன். ஒப்பனைக் கலைஞராக இந்த துறையில் 21 வருட அனுபவம் கொண்டவர் இவர். .


புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் விதமாக, கடந்த வருடம் டிச-28ல் ஒப்பனை மற்றும் நவீன ஒப்பனை போட்டி, பேஷன் ஷோ ஆகியவற்றை சென்னையில் நடத்தினார்,


இந்த துறையில் உள்ள 200க்கும் மேற்பட்ட ஒப்பனைக் கலைஞர்களும் அழகு கலை நிபுணர்களும் கலந்துகொண்டு நிகழ்ச்சியை வெற்றிகரமான நிகழ்ச்சியாக மாற்றினார்கள்.


இந்தநிலையில் தற்போது அடித்தட்டு நிலையில் இருந்து தங்களது உழைப்பால் முன்னேறி மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழும் பத்து பெண்களை தேர்வு செய்து அவர்களுக்கு சுயம்பி என்கிற விருது வழங்கி கவுரவிக்க இருக்கிறார் இலங்கேஸ்வரி முருகன்.


அதேபோல தமிழ்நாடு முழுதும், கிராமத்தில் இருந்து வருகின்ற அழகு கலை நிபுணர்கள் மற்றும் ஒப்பனை கலைஞர்கள் அனைவருக்கும் ஒரு மிகப்பெரிய போட்டி நடத்தி அவர்களுக்கான தொழில் செய்யும் தளங்களை உருவாக்கி கொடுக்க இருக்கிறார்.


அதுமட்டுமல்ல பேஷன் ஷோ ஒன்றை நடத்தி அதில் நம் வீட்டு செல்லப் பிள்ளைகளை நடந்துவர செய்து, அந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைக்கும் தொகையை குழந்தைகள் நல மருத்துவமனைகளில் உள்ள புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தேவையான உபகரணங்களை வாங்கி கொடுக்க இருக்கிறார்.


விரைவில் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளும் மற்றும் அதற்கான நிதி திரட்டலும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன என்கிறார் இலங்கேஸ்வரி முருகன்.

0 comments:

Pageviews