இயக்குனர் திரு.பொன்ராம் அவர்கள் வெளியிட்ட ஜெட்டி திரைப்படத்தின் முதல் பார்வை

 


நவீனமான இந்த நூற்றாண்டிலும் , கலாச்சாரம் , கட்டுப்பாடுடன் வாழும் கடலோர மீனவ கிராமங்கள் எத்தனையோ உள்ளன . அப்படிப்பட்ட ஒரு கடலோர கிராமத்தில் மக்கள் மனதை உலுக்கிய ஓர் உண்மைச்சம்பவத்தை மையமாக வைத்து எடுக்க பட்ட படம் ஜெட்டி !.. கடல்சார்ந்த மீனவ கிராமங்களின் வாழ்வியலை யதார்த்தமாக படம் பிடித்துக்காட்டி , அவர்களுடைய பிரச்சினைகளை சொல்வதோடு மட்டும் அல்லாமல் , அதற்குண்டான நிரந்தர தீர்வுகளையும் சொல்லும் உயர்ந்த நோக்கத்தோடு எடுக்கப்பட்ட படம் ஜெட்டி ! இதில் நந்திதா சுவேதா , புதுமுகம் மான்யம் கிருஷ்ணா , கிஷோர் , மைம் கோபி , சுமன்ஷெட்டி ஆகியோர் நடித்துள்ளனர் . " ஜில் ஜில் ஜில் " என்ற இளமை  துள்ளலான பாடலுக்கு சிறப்பாக ஆடி இருக்கிறார் தேஜாஸ்வினி தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் அதிகமான பொருட்செலவில் தயாரித்து இருக்கிறார் தயாரிப்பாளர் கே . வேணு மாதவ் , ஒரே ஒருமுறை தயாரிப்பாளரிடம் கதை சொல்லி கொரோணா  காலத்திலே படம் எடுக்க வைத்து , திரைக்கதை எழுதி , யதார்த்தமாக இயக்கி இருக்கிறார் அறிமுக இயக்குனர் பி . சுப்பிரமணியம் பிரபல ஒளிப்பதிவாளர் ரத்னவேலுவின் இணை ஒளிப்பதிவாளர் வீரமணி ஒளிப்பதிவு செய்துள்ளார் . இயக்குனர் பி.வசுவின் உதவியாளர் தி.ரமேஷ் பிரபாகரன் வசனம் எழுதி இருக்கிறார் .கார்த்திக் கொடக்கன்ட்லாவின் இசையில் அத்தனை  பாடல்களையும் கவிஞர் டாக்டர் கிருதியா எழுதியுள்ளார் . விஜய் பிரகாஷ் ,விஜய்யேசுதாஸ் பாலக்காடு ஸ்ரீராம் , ஸ்ரீகாந்த் ஹரிஹரன் , வைக்கோம் விஜயலக்ஷ்மி பத்மஜா , ஸ்ரீனிவாசன் ஆகியோர் பாடல்களை பாடியுள்ளனர் .

சமிபத்தில் இயக்குனர் திரு.பொன்ராம் அவர்கள் தன்னுடைய அடுத்த படமான எம்ஜிஆர் மகன் வெளியீடு வேலைகளில் இருந்த போதிலும் தன்னுடைய பொன்னான நேரத்தை ஒதுக்கி தன்னுடைய பொற்கரங்களால் இப்படத்தின் முதல் பார்வையை வெளியிட்டு படக்குழுவினரை வெகுவாக பாராட்டி உள்ளார்.

0 comments:

Pageviews