”சங்கம் நடத்துவது என்பது சாதாரணமான விஷயமல்ல..!" - ஆர்.கே.செல்வமணி அதிரடி பேச்சு

 


கலைமாமணி விருது பெற்ற  மூத்த 

பத்திரிகையாளரும், மக்கள் தொடர்பாளருமான திரு.நெல்லை சுந்தர்ராஜன், மற்றும் எழுத்தாளரும், பத்திரிகையாளருமான திரு.மணவை பொன் மாணிக்கம்  ஆகியோரை பாராட்டும் விதமாகவும், திரு.டைமண்ட் 

பாபு தலைமையிலான சினிமா மக்கள் தொடர்பாளர் (PRO) யூனியனின் புதிய நிர்வாகிகளை பாராட்டும் விதமாகவும் சினிமா 

பத்திரிகையாளர் சங்கம் சார்பில், பாராட்டு விழா நடத்தப்பட்டது.


சென்னை, சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்ற பாராட்டு விழாவில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் 

சம்மேளனத்தின் தலைவர் திரு.ஆர்.கே.செல்வணி, இசைக்கலைஞர்கள் சங்க தலைவர் திரு.தினா, இயக்குநர் திரு.வி.சேகர், 

சேலம் ஆர்.ஆர் பிரியாணி உணவகத்தின் உரிமையாளர் திரு.தமிழ்ச்செல்வன், மூத்த பத்திரிகையாளர்கள் திரு.ராம்ஜி, 

திரு.துரை ராமச்சந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டார்கள்.


நிகழ்ச்சியில், கலைமாமணி விருது பெற்ற, சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் கௌரவ ஆலோசகரான திரு.நெல்லை சுந்தர்ராஜன் மற்றும் துணைத்தலைவரான  திரு.மணவை பொன் 

மாணிக்கம்  ஆகியோருக்கு மாலை மற்றும் பொன்னாடை அணிவித்து மரியாதை 

செய்யப்பட்டதோடு, பொற்கிழியும் வழங்கப்பட்டது.


மேலும், திரு.டைமண்ட் பாபு அவர்களின் தலைமையிலான சினிமா மக்கள் தொடர்பாளர்கள் (PRO) யூனியனின் புதிய 

நிர்வாகிகளுக்கும் பொன்னாடை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.


நிகழ்ச்சியில் பேசிய சினிமா தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பான பெப்சி (FEFSI) அமைப்பின் தலைவர் திரு.ஆர்.கே.செல்வமணி, ”சங்கம் நடத்துவது என்பது சாதாரணமான விஷயமல்ல. 

அதிலும், பத்திரிகையாளர்களை ஒன்றிணைத்து சங்கம் நடத்துவது என்பது மிகப்பெரிய சவலான விஷயம்..."  அந்த சவாலை 

மிக சிறப்பாக எதிர்கொண்டு சங்கத்தை வெற்றிகரமாக நடத்தி வரும் சினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தலைவர் 

திரு.டி.ஆர்.பாலேஸ்வர், செயலாளர் திரு.ஆர்.எஸ்.கார்த்திக், பொருளாளர்  திரு.மதிஒளி குமார் உள்ளிட்ட சங்க நிர்வாகிகளுக்கு எனது 

வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.


கலைமாமணி வென்ற திரு.நெல்லை சுந்தரராஜன் மற்றும் நான் எப்போதும் மாணிக்கம் என்று அழைக்க கூடிய 

திரு.மணவை பொன் மாணிக்கம் ஆகியோர் விருது பெறக்கூடிய அத்தனை தகுதிகளும் உள்ளவர்கள். அவர்களுக்கு 

என்னுடைய பாராட்டும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


சாதாரண செல்வமணியாக இருந்த என்னை ஆர்.கே.செல்வமணியாக உயர்த்தியவர்களில் மக்கள் தொடர்பாளர் 

திரு.டைமண்ட் பாபுவும் ஒருவர். சினிமாவில் என்னை யாருக்கும் தெரியாத போது, நான் அறிந்த இருவர் சிங்காரவேலுவும் டைமண்ட் பாபுவும் தான். அதில் டைமண்ட் பாபு தலைமையிலான சினிமா மக்கள் தொடர்பாளர்கள் யூனியனின் இன்றைய புதிய நிர்வாகிகளுக்கும் என் வாழ்த்துகளை 

தெரிவித்துக் கொள்கிறேன்.


சினிமா தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பான பெப்சி (FEFSI) அமைப்பின்  மூலம் பத்திரிகையாளர்களுக்கு முடிந்த உதவிகளை நான் செய்துக் கொண்டு தான் இருக்கிறேன். தற்போது கூட 

பெப்சி (FEFSI) தொழிலாளர்களுக்காக உருவாக்கப்பட்ட உணவு தானியம் கடையின் மூலம் பத்திரிகையாளர்களும் பயன்பெற 

வேண்டும், என்று பத்திரிகை நண்பர் ஒருவர் என்னிடம் கோரிக்கை வைத்தார். அதனை ஏற்று, நான் சம்மந்தப்பட்டவர்களிடம் 

பேசிக்கொண்டு இருக்கிறேன். எனவே விரைவில் நல்ல செய்தி வரும் என்று எதிர்ப்பார்க்கிறேன். அதேபோல், பெப்சி (FEFSI)

தொழிலாளர்களுக்காக கட்டப்படும் குடியிருப்பில் பத்திரிகையாளர்கள் மற்றும் மக்கள் தொடர்பாளர்களுக்கும் வீடு வழங்கும் 

முயற்சியிலும் இறங்கியிருக்கிறேன். ஆனால், அது குறித்து தற்போது எந்த ஒரு உறுதியும் அளிக்க முடியாது. வீடு கட்டும் 

பணி தொடங்கிய பிறகு அது குறித்து பேசலாம். ஆனால், நிச்சயம் பத்திரிகையாளர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை 

நான் எப்போதும் 

செய்துக்கொண்டு தான் இருப்பேன்.” என்று தெரிவித்தார்.


ஆர்.கே.செல்வமணி அவர்களைத் தொடர்ந்து இயக்குனர் வி.சேகர் , இசைக்கலைஞர்கள் சங்க தலைவர் இசைஞர்.தீனா ,

சேலம் ஆர்.ஆர்.பிரியாணி குரூப் ஆஃப் கம்பெனிஸ்  உரிமையாளர் திரு.தமிழ்செல்வன், மூத்த பத்திரிகையாளர்கள் 

'மக்கள் குரல்' திரு.ராம்ஜி , 'ரோஜா தமிழ் டி.வி' திரு.துரை ராமச்சந்திரன் உள்ளிட்டோரும் பாரட்டு பெறுபவர்களையும் பத்திரிகையாளர்களையும் பாராட்டி பேசினர். கலைமாமணிகள் திரு.நெல்லை சுந்தர்ராஜன் , திரு.மணவை பொன் மாணிக்கம் பி.ஆர்.ஓ யூனியன் தலைவர் திரு.டைமண்ட் பாபு , செயலாளர்  திரு.யுவராஜ் உள்ளிட்டோர் ஏற்புரையாற்ற முன்னதாக .,  சினிமா பத்திரிகையாளர் சங்கத் தலைவர் திரு.டி.ஆர்.பாலேஷ்வர் வரவேற்புரை ஆற்றிட முடிவில் செயலாளர் ஆர்.எஸ்.கார்த்திகேயன் நன்றியுரையாற்றினார். விழாவினை  இனிதாக சினிமா பத்திரிகையாளர் திரு.விஜய் ஆனந்த் தொகுத்து வழங்கிட விழா இனிதே நிறைவுற்றது.

0 comments:

Pageviews