உலக தொலைக்காட்சியில் முதன்முறையாக அசோக் – தி லயன் மற்றும் ராஜசிங்கம் திரைப்படங்களை ஒளிபரப்புகிறது கலர்ஸ் தமிழ்
உலக தொலைக்காட்சியில் முதன்முறையாக
அசோக் – தி லயன் மற்றும் ராஜசிங்கம் திரைப்படங்களை ஒளிபரப்புகிறது கலர்ஸ் தமிழ்
அக்டோபர் 3 -ம் தேதி ஞாயிறன்று, பிற்பகல் 12:30 மற்றும் 3:30 மணிக்கு சண்டே சினி காம்போ நிகழ்வின் கீழ் இத்திரைப்படங்களை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் கண்டு மகிழுங்கள்
சென்னை, செப்டம்பர் 30, 2021: தமிழகத்தின் சிறந்த பொது பொழுதுபோக்கு தொலைக்காட்சியான கலர்ஸ் தமிழ், வரும் ஞாயிறன்று அசோக் தி லயன் மற்றும் ராஜசிங்கம் என்ற பிரபல திரைப்படங்களை உலகத் தொலைக்காட்சியில் முதன்முறையாக ஒளிபரப்புவதன் மூலம் உங்களை தன்வசப்படுத்துவது நிச்சயம். இந்த சேனலின் சண்டே சினி காம்போ நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஒளிபரப்பப்படவுள்ள இந்த திரைப்படங்கள், ரொமான்டிக் – ஆக்ஷன் மற்றும் வரலாற்றுப் பின்னணியிலான ஆக்ஷன் என்ற வகையினங்களைச் சேர்ந்தவை. அக்டோபர் 3 ஆம் தேதி, இந்த ஞாயிறன்று பிற்பகல் 12:30 மற்றும் 3:30 மணிக்கு கலர்ஸ் தமிழ் அலைவரிசையில் சிறப்பான இத்திரைப்படங்களை கண்டு மகிழ மறக்காதீர்கள்.
அசோக் – தி லயன் என்ற திரைப்படம், சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த ரொமான்டிக் – ஆக்ஷன் கலந்த திரைப்படமாகும். ஜுனியர் என்டிஆர், சமீரா ரெட்டி, பிரகாஷ் ராஜ் மற்றும் சோனு சூட் ஆகிய பிரபல நட்சத்திரங்கள் முன்னணி கதாபாத்திரங்களில் இதில் நடித்திருக்கின்றனர். இத்திரைக்கதையானது, அசோக் என்ற இளைஞன் (ஜுனியர் என்டிஆர் நடிப்பில்), அவனது பாட்டியின் இறப்பிற்கு காரணமானவன் என்று பழி சுமத்தப்பட்ட பிறகு அதிலிருந்து எப்படி மீண்டான் என்பதைச் சுற்றி நகர்கிறது. திறமை வாய்ந்த ஒரு டான்சரான அஞ்சலி (சமீரா ரெட்டி) உடன் காதலில் விழுகிறான் அசோக். அசோக்கின் துயரையும், சிரமத்தையும் புரிந்துகொள்ளும் அஞ்சலி, ரௌடியான கே.கே. (சோனு சூட் – ன் நடிப்பில்) செய்யும் ஒரு கொடுமையான குற்றத்தை நேரில் கண்ட சாட்சியாக இருக்க அஞ்சலியை சிக்கவைக்க கேகே முயற்சிக்கிறார். அஞ்சலியைப் பாதுகாப்பதற்காக கேகே உடன் அசோக் தொடங்கும் யுத்தத்தை சுற்றி கதையின் பிற்பகுதி நகர்கிறது.
இயக்குனர் கே.வி. விஜயயேந்திர பிரசாத்தின் சிறப்பான இயக்கத்தில் 2011 – ம் ஆண்டு வெளிவந்த ராஜசிங்கம், ஒரு வரலாற்று திரைக்கதையாகும். அதிரடி ஆக்ஷன் நிறைந்த இதில், நாகார்ஜுனா, ஸ்நேகா மற்றும் பேபி ஆனி ஆகியோர் முக்கிய கதாபத்திரங்களில் நடித்திருக்கின்றனர். மனதை உருக்கும் கதை, சண்டை மற்றும் வரலாற்று நிகழ்வுகள் நிறைந்த இத்திரைப்படம், மல்லம்மா (பேபி ஆனி – ன் நடிப்பில்) என்ற ஒரு ஆதரவற்ற சிறுமியைச் சுற்றி பின்னப்பட்டிருக்கிறது. அவளது கிராமத் தலைவரின் வெறுப்பு மற்றும் ஆட்சேபனையின் காரணமாக பாடுகின்ற சுதந்திரத்தை இழக்கிறாள் இச்சிறுமி. இதற்கிடையே, அவளது சுதந்திரத்திற்காகப் போராடுமாறு அவளை ஊக்குவிப்பதற்கு மல்லம்மாவிற்கு இசை கற்றுத்தரும் ஆசிரியர் ராஜசிங்கத்தின் (நாகார்ஜுனாவின் நடிப்பில்) கதையை அவளுக்கு சொல்கிறார். ராஜசிங்கத்தின் வீரதீர பராக்கிரம செயல்களால் உத்வேகம் பெறும் மல்லம்மா, எப்படி அவளது சிரமங்களையும் தடைகளையும் வென்று சாதிக்கிறாள் என்பதே கதையின் மையமாகும்.
உங்கள் வார இறுதி நாட்களை ஆனந்தமாக கழிக்க அக்டோபர் 3, இந்த ஞாயிறு பிற்பகல் 12:30 மற்றும் 3:30 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை டியூன் செய்ய மறவாதீர்கள். அனைத்து முன்னணி கேபிள் வலையமைப்புகளிலும் மற்றும் சன் டைரக்ட் (CHN NO 128), டாடா ஸ்கை (CHN NO 1555), ஏர்டெல் (CHN NO 763), டிஷ் டிவி (CHN NO 1808) மற்றும் வீடியோகான் D2H (CHN NO 553) ஆகிய அனைத்து டிடீஹெச் தளங்களிலும் கலர்ஸ் தமிழ் அலைவரிசை நிகழ்ச்சிகளைக் கண்டு ரசிக்கலாம். தங்களது சௌகரியத்திற்கேற்றவாறு எந்த நேரத்திலும் கலர்ஸ் தமிழின் நிகழ்ச்சிகளைக் கண்டுமகிழ VOOT – ஐ பார்வையாளர்கள் டியூன் செய்யலாம்.
0 comments:
Post a Comment