Sony Liv -ல் வெளியாகிறது பரத் நடித்திருக்கும் “ நடுவன் “ திரைப்படம்

 


Sony Liv  தொடர்ச்சியாக தரமான  படங்களை வெளியீடு செய்து, மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறது. குறுகிய காலகட்டத்தில், வரிசையாக தொடர் வெற்றி திரைப்படங்களின் பிரீமியர் மூலம்  மக்களிடம் இந்நுறுவனம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.  Sony Liv வெளியிட்டு வரும் வெற்றித் திரைப்பட வரிசையில் தற்போது மற்றொரு படமும் இணைந்துள்ளது. பரத் நடிப்பில், ஷரங் இயக்கத்தில், Cue Entertainment Production சார்பில் Lucky Chhajer  தயாரித்துள்ள  “ நடுவன்” திரைப்படம் வெளியாகவுள்ளது.  திரைப்படம் வெளியாகும் தேதியுடன் கூடிய, படத்தின் டிரெய்லரை, Sony Liv இன்று  தனது தளத்தில் வெளியிட்டுள்ளது. 

நடிகர் பரத் நிவாஸ் உடைய கடின உழைப்பையும், இயக்குனர் ஷரங் உடைய சுவாரஷ்யமான கதை சொல்லும் யுக்தியையும், திறமை மிகுந்த பல்வேறு நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினரின் அர்ப்பணிப்பு மிக்க உழைப்பையும், மக்கள் விரைவில்  தங்கள் வீட்டு திரையில் காணப்போகிறார்கள். 

ஆச்சர்யங்கள்  மற்றும் திருப்பங்கள் நிறைந்த இந்த திரில் திரைப்படத்தில் அபர்ணா வினோத் கதாநாயகியாக வருகிறார். 

“நடுவன்” திரைப்படத்தின் முதல் பாடலாக, திறமைமிகுந்த தரண் குமார், அவர்களின் இசையில் வெளியான “காலை” பாடல் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஷரங் இப்படத்தினை எழுதி, இயக்குகிறார்.  கோகுல் ஆனந்த், யோக் ஜெய்பீ, ஜார்ஜ், பாலா, தசராதி குரு, கார்த்திக், சுரேஷ் ராஜ், ஆராத்யா ஶ்ரீ மற்றும் பல நடிகர்கள்  படத்தில் இணைந்து நடித்துள்ளனர். 

ஒளிப்பதிவு-யுவா, படதொகுப்பு- சன்னி சவ்ரவ், கலை- சசிகுமார், பாடல் வரிகள்- கார்கி & Dr Burn, மக்கள் தொடர்பு - சுரேஷ் சந்திரா D’One

0 comments:

Pageviews