ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிடம் வாழ்த்து பெற்ற "கட்டில்" திரைப்பட இயக்குனர்

 


தெலுங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜனிடம் "கட்டில்" திரைப்பட நூலை வழங்கி வாழ்த்து பெற்றிருக்கிறார்  இயக்குனர் இ.வி.கணேஷ்பாபு.


இதுபற்றி அவர் கூறியதாவது.

கொரோனா இரண்டாம் அலைக்குப்பிறகு 50% பார்வையாளர்களுடன் திரையரங்கம் அனுமதிக்கப்பட்டிருக்கும் இந்த சூழலில் கட்டில் திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட ஏற்பாடு நடந்து வருகிறது.

 அதன் பொருட்டு உயர்பெருமக்கள் பலரையும் சந்தித்து வாழ்த்து பெற்று வருகிறேன்.


 தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் அவர்களை  சந்தித்து வாழ்த்து பெற்றேன்.


பீ.லெனின், வைரமுத்து, ஶ்ரீகாந்த்தேவா, மதன்கார்க்கி, சித்ஶ்ரீராம், சிருஷ்டிடாங்கே,  இந்திராசொந்திரராஜன், கீதாகைலாசம், மெட்டிஒலிசாந்தி, மாஸ்டர்நிதீஷ் ஆகிய பிரபலங்களோடு களமிறங்கும் கட்டில் திரைப்பட ஆடியோ ரிலீஸ் விரைவில் நடைபெற உள்ளது.


இவ்வாறு கட்டில் திரைப்பட இயக்குனரும்,ஹீரோவுமான இ.வி.கணேஷ்பாபு கூறினார்

0 comments:

Pageviews