பூமிகா திரை விமர்சனம்
திரைக்கு வராமல் இயக்குனர் ரத்தீந்திரன் பிரசாத் இயக்கத்தில் நேரடியாக விஜய் டிவியில் வெளியான படம் பூமிகா இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
பேய் படங்கள் என்றாலே நாம் பழக்கப்பட்ட காட்சிகளிலிருந்து சற்று வித்தியாசமாக தான் சொல்ல விரும்பிய கதையை கச்சிதமாக சொல்லியுள்ளார் இயக்குனர்.
கட்டுமான பணிகளுக்காக காட்டுக்குள் வரும் நாயகன் கௌதமன், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் அவரது குழுவினர் பேய் இருப்பது தெரியாமல் ஒரு பழைய கட்டடத்தில் தங்குகின்றனர். அப்பொழுது இறந்துபோன நண்பர்களிடமிருந்து தனது மொபைலுக்கு மெசேஜ் வருகிறது. இதன் மூலம் அங்கு பேய் இருப்பதை அறியும் அவர்கள் அதிலிருந்து எப்படி தப்பிக்கிறார்கள் என்பதே இந்த படத்தின் கதை.
வழக்கம்போல் படம் பார்த்துக் கொண்டிருக்கும்போது பழைய படங்களை ஞாபகப்படுத்துகிறது. படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், விது, சூர்யா அனைவரும் தங்களது கதாபாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர்.
முதல் பாதியில் நாம் யூகிக்க முடிந்த பல காட்சிகள் இடம் பெற்றிருந்தாலும் இரண்டாவது பாதியில் சற்று சுவாரசியமாக கதையை கொண்டு சென்றிருக்கிறார்கள். பிருத்வி சந்திரசேகரின் பின்னணி இசையும், ராபர்டோவின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலமாக அமைந்துள்ளது.
0 comments:
Post a Comment