"வாழ்" திரைப்படம், நேரடியாக OTT தளத்தில் வெளியாகிறது !
ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் பாராட்டுக்களை குவித்த "கனா" மற்றும் கமர்ஷியலாக நல்ல வெற்றியினை பெற்ற "நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா" படங்களை தொடர்ந்து Sivakarthikeyan Productions தயாரிப்பில் மூன்றாவது திரைப்படமாகவும், "அருவி" படம் மூலம் புகழ் பெற்ற இயக்குநர் அருண் புருஷோத்தமன் இயக்கத்தில், இரண்டாவது திரைப்படமாகவும் உருவாகியுள்ள "வாழ்" திரைப்படம், ரசிகர்களிடம் மிகப்பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தற்போது இத்திரைப்படம் நேரடியாக உலகம் முழுதும் OTT யில் ஜூலை 16, 2021, அன்று SonyLIV தளத்தில் வெளியாகிறது.
Sivakarthikeyan Productions நிறுவன இணைத்தயாரிப்பாளர் கலை அவர்கள் இது குறித்து கூறியதாவது...
உலக அளவில் புகழ் பெற்ற, பல மொழிகளிலும், தரமான கதைகள் மூலம் சந்தாரர்களை உயர்த்தி வரும் நிறுவனமான SonyLIV உடன் இணைந்து, எங்கள் படத்தினை வெளியிடுவது மிகப்பெரும் பெருமையாகும். தொழில் நுட்பத்தில் சிறப்பபான, மிகப்பெரும் அளவில் நேரடி படைப்புகளை உருவாக்கி, தரமான படைப்புகள் மூலம் தனது சந்தாரர்களை அசத்தி வருகிறது SonyLIV நிறுவனம். இப்படியான ஒரு நிறுவனத்துடன் இணைந்து Sivakarthikeyan Productions நிறுவனம், எங்களின் பெருமை மிகு படைப்பான "வாழ்" திரைப்படத்தினை ரசிகர்களுக்கு வழங்குவதில் மகிழ்கிறோம். "வாழ்" திரைப்படம் எங்கள் இதயதிற்கு நெருக்கமான படைப்பு. இப்படத்தின் சமூக கருத்தும், அழகான உருவாக்கமும் அனைத்து ரசிகர்களையும் சென்று சேர வேண்டுமென்பதே எங்கள் விருப்பம். இந்தியாவின் மிகப்பெரும் நிறுவனங்களில் ஒன்றாக திகழும் SonyLIV வழியே, "வாழ்" திரைப்படம் மிகப்பெரும்பான்மையிலான ரசிகர்களை
சென்றடையும் என்று, உறுதியாக நம்புகிறோம் என்றார்.
அருண் புருஷோத்தமன் எழுதி இயக்கியிருக்கும் "வாழ்" திரைப்படத்தில் பிரதீப், பானு, திவா மற்றும் யாத்ரா முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளார்கள். ப்ரதீப் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். Shelley Calist ஒளிப்பதிவு செய்ய, Raymond Derrick Crasta படத்தொகுப்பு செய்துள்ளார். ஸ்ரீ ராம் கலை இயக்கம் செய்ய, திலீப் சுப்பராயன் சண்டைப்பயிற்சி செய்துள்ளார். ஒலி வடைவமைப்பை Jaikar Harinath செய்துள்ளார். உடை வடிவமைப்பை M. தினேஷ் செய்ய, DI பணிகளை மாதேஸ்வரன் செய்துள்ளார். விளம்பர வடிவமைப்பை கபிலன் செய்துள்ளார் . Ra. Sibi மாரப்பன் எக்ஸிக்யூட்டிவ் புரடியூசராக பணியாற்ற, நடிகர் சிவகார்த்திகேயன் Sivakarthikeyan Productions சார்பில் இப்படத்தை தயாரித்துள்ளார்.
Ashish Golwalkar, Head - Content, Digital Business and SET அவர்கள் பகிர்ந்துகொண்டதாவது..
மிகச்சிறந்த கதைகளை பல களங்களில் ரசிகர்களுக்கு தரும் எங்களது தேடலில், தமிழில் அப்படியான தரமான படப்பை தர நினைத்தோம். கதையை சொன்ன விதத்திலும், மனித உணர்வுகளை, கதாப்பாத்திரங்களை கையாண்ட விதத்திலும், "வாழ்" திரைப்படம் பல படிகள் மெருகேறிய படைப்பாக உருவாகியுள்ளது. எங்கள் வழியிலான தமிழ் ரசிகர்களுக்கு, அனைத்து வகையிலும் பிரமிப்பை தரும் அட்டகாசமான படைப்பாக "வாழ்" இருக்கும். இப்படத்தினை கண்டிப்பாக ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என நம்புகிறோம் என்றார்.
0 comments:
Post a Comment