தளபதி விஜய் மக்கள் இயக்கம் கடலூர் மேற்கு மாவட்டம் சார்பில் தளபதி மாணவர் வழிகாட்டி ஆன்லைன் நிகழ்ச்சி!

 


தளபதி விஜய் மக்கள் இயக்கம் கடலூர் மேற்கு மாவட்டம் மக்கள் இயக்கம் சார்பில் 10, 12ஆம் வகுப்பு முடித்த பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு வழிகாட்டும் வகையில் தளபதி மாணவர் வழிகாட்டி நிகழ்ச்சி ஆன்லைன் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது. மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கிட கல்வியாளர்கள், போட்டித்தேர்வு பயிற்சியாளர்கள் பங்கேற்று பல்வேறு தகவல்களை மாணவர்களுக்கு வழங்கினார்கள்.


இந்த ஆன்லைன் நிகழ்ச்சியை மக்கள் இயக்க மாநிலப் பொதுச்செயலாளர் புஸ்ஸி.N.ஆனந்து Ex.MLA அவர்களின் வழிகாட்டுதல் படி கடலூர் மேற்கு மாவட்ட மக்கள் இயக்கத்தினர் ஏற்பாடு செய்தனர்.


கடலூர் மேற்கு மாவட்டத் தலைவர் A.ராஜசேகர்,  மேற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் EMR.S. விஜய், வடமேற்கு மாவட்ட தொண்டரணி தலைவன் M.K.ஆனந்த்,  வடமேற்கு மாவட்ட மாணவரணி தலைவர் M.அப்பாஸ்,  தென்மேற்கு மாவட்ட மாணவரணி தலைவர் M.S.சரவணன்  மற்றும் கடலூர் மக்கள் இயக்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் ரசிகர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

0 comments:

Pageviews