என்னை நானே புதிப்பித்து கொண்டிருக்கிறேன் - அமலாபால் !

 


இளம் கனவு நாயகி எனும் பதத்தை உடைத்து, சவால் மிக்க கதாப்பாத்திரங்களில், முதிர்ச்சியான நடிப்பால் மிளிர்ந்து வருகிறார் நடிகை அமலா பால். பெண் கதாப்பாத்திரங்களை மையப்படுத்தி உருவாகும், சவால் மிகுந்த படைப்புகளை தேடி, தேடி, நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான “பிட்ட கதலு” தெலுங்கு இணைய தொடர் பெரும் பாராட்டுக்களை குவித்தது. தற்போது பிரபல  கன்னட இயக்குநர் பவன் குமார் இயக்கத்தில் சயின்ஸ் பிக்சன் வடிவில் உருவாகியிருக்கும் “Kudi Yedamaithe” தெலுங்கு இணைய தொடரில், குடிக்கு அடிமையான, நேர்மையான போலீஸ் அதிகாரியாக, நடிப்பில் கலக்கியுள்ளார் அமலா பால். இந்த இணைய தொடர் 2021 ஜூலை 16 Aha தளத்தில் வெளியாகியுள்ளது. இதில் அமாலா பாலின் கதாபாத்திரம்  ரசிகர்களிடம் பெரும் பாராட்டுக்களை குவித்து வருகிறது.



இது குறித்து நடிகை அமலா பால் கூறியதாவது...


நான் திரைத்துறைக்கு வந்து 12 வருடங்கள் ஆகிவிட்டது. ஆரம்பத்தில் ஓய்வே இல்லாமல், தொடர்ச்சியாக பல படங்களில் நடித்திருக்கிறேன். நிறைய ஏற்ற இறக்கங்களை சந்தித்திருக்கிறேன். எனது தனிவாழ்வில் நிறைய பிரச்சனைகளையும் கடந்து வந்திருக்கிறேன். சினிமா நிறைய கற்றுக்கொடுத்திருக்கிறது. இப்போது இந்த இடத்தில் இருப்பது மகிழ்ச்சியே. இனி எனக்கு சவால் தரும் பாத்திரங்களிலும், மிக நல்ல படைப்புகளிலும் நடிக்கவே விரும்புகிறேன். தற்போது என்னை நானே புதிப்பித்து கொண்டிருக்கிறேன். எனது நடிப்பிற்காக, தனித்த முறையில்  பாராட்டுக்கள்  கிடைத்து வருவது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. மிகுந்த கவனத்துடன் தான், நான் நடிக்கும் படைப்புகளை தேர்வு செய்து வருகிறேன். இப்போது நிறைய நல்ல வாய்ப்புகள் என்னை தேடி வந்து கொண்டிருக்கிறது.


“பிட்ட கதலு” தொடர் எனக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. அதன் இயக்குநர் நந்தினி மூலம் தான், இயக்குநர்  பவன் குமார் அறிமுகமும், இந்த வாய்ப்பும் கிடைத்தது. சிக்கலில் சிக்கிகொள்ளும் ஒரு போலீஸ் அதிகாரி என்பதை தாண்டி, இதில் என்ன சுவார்ஸ்யம் இருக்கிறது எனக்கேட்டேன்,  இந்த துர்கா எனும் காவல் அதிகாரி பாத்திரம், குடிக்கு அடிமையாகி மீளத்துடிக்கும் பாத்திரம். அது எனக்கு இன்னும் சுவாரஸ்யமாக, சவால்கள் நிறைந்ததாக இருந்தது. பவன் குமார் மிகச்சிறந்த படைப்பாளி. அவரின் எழுத்தும் அதை அவர் திரைக்கு மாற்றும் வித்தையும் அபாரமானதாக இருக்கிறது. முடிந்த வரை அனைத்தும் இயல்பாக, தத்ரூபமாக இருக்க வேண்டும் என்று நினைப்பார். ரசிகர்களை வசப்படுத்தும் வித்தை அவருக்கு தெரிந்து இருக்கிறது. இந்த தொடரில் நிறைய சுவாரஸ்யங்கள் இருக்கிறது. இது டைம் லூப் சயின்ஸ் பிக்சன்,  ரசிகர்களுக்கு ஒரு புதிதான அனுபவமாக இருக்கும். இதுவரையிலும் இந்த் தொடரை பார்த்த ரசிகர்கள் என் கதாப்பத்திரத்தை கொண்டாடி வருவது மனதிற்கு பெரும் மகிழ்ச்சி


தற்போது  பாலிவுட் தயாரிப்பாளர் மகேஷ் பட் தயாரிப்பில், பாலிவுட் 1970 காதல் கதை ஒன்றில் நடித்திருக்கிறேன். அந்த தொடர் விரைவில் வெளிவரவுள்ளது. எனது சொந்த தயாரிப்பில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வரும் Cadaver திரைப்படமும் விரைவில் நிறைவு பெறவுள்ளது. இனி என்னை, நிறைய புதுமையான பாத்திரங்களில் நீங்கள் ரசிக்க முடியும் என்றார்.

0 comments:

Pageviews