"அருள்நிதி 15" படத்தின் அனைத்து உரிமைகளையும் கைப்பற்றியது, B.சக்திவேலன் அவர்களின் Sakthi Film Factory நிறுவனம் !

 


MNM Films நிறுவனத்தின் சார்பில் அரவிந்த் சிங் தயாரிக்க, YouTuber விஜய் குமார் ராஜேந்திரன் இப்படத்தை இயக்கியுள்ளார்


B. சக்திவேலன் அவர்களின் Sakthi Film Factory  நிறுவனம் தமிழ் திரைத்துறையில் ரிலீஸ் மற்றும் மார்க்கெட்டிங் மூலம் பல அற்புதமான வெற்றி திரைப்படங்களை தந்துள்ளது. அவர்களின் மிகச்சிறந்த மார்க்கெட்டிங் உத்திகள், ரிலீஸில் அவர்கள் கடைப்பிடிக்கும் புதுமையான நடைமுறைகள்,  பட்டி தொட்டி வரை, திரைப்படங்களை அவர்கள் கொண்டு சேர்க்கும் பாங்கு, தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் நடிகர்கள் மத்தியில்  Sakthi Film Factory  நிறுவனத்திற்கு மிகப்பெரிய பெயரினை பெற்று தந்திருக்கிறது. திரைத்திறையில் புகழ்பெற்ற நிறுவனமாக மாறியுள்ள, Sakthi Film Factory நிறுவனம் முதல் முறையாக ஒரு திரைப்படத்தின் முழு உரிமைகளையும் பெற்று அதனை வெளியிடும் பயணத்தில் இறங்கியுள்ளது. ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங் அவர்களின் MNM Films நிறுவன தயாரிப்பில், YouTube ல்  எரும சாணி  தொடர் மூலம் புகழ் பெற்ற விஜய் குமார் ராஜேந்திரன் இயக்கத்தில், தற்போதைக்கு "அருள்நிதி15" என தலைப்பிடப்பட்டிருக்கும், புதிய திரைப்படத்தின் அனைத்து உரிமைகளையும் பெற்றிருக்கிறது Sakthi Film Factory நிறுவனம்.



Sakthi Film Factory நிறுவனம் சார்பில் B.சக்திவேலன்  இது குறித்து கூறியதாவது...


நடிகர் அருள்நிதி மிக வித்தியாசமான களங்களில், ரசிகர்கள் ரசிக்கும்படியான படங்களையும், குடும்பத்தினர் கொண்டாடும் படங்களையும், தொடர்ச்சியாக தந்துவருகிறார். அவரது சமீபத்திய படமான "களத்தில் சந்திப்போம்" திரைப்படத்தின் வெற்றி திரைத்துறையில் அவரது மதிப்பை உயர்த்தியிருக்கிறது. ஒரு நண்பரின் மூலமாக அவரது இந்த திரைப்படத்தின் இறுதி பதிப்பை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. படம் முடியும் வரையிலும் படம் எவ்வாறு செல்லும் என்பதை கணிக்கமுடியாதபடி, பல ஆச்சர்யஙகளை தந்தது இந்த திரைப்படம். அனைத்து வகையான ரசிகர்களும் கொண்டாடும் அம்சங்கள் படத்தில் நிரம்பியிருந்தது. படம் முடிந்த கணத்திலேயே படத்தின் அனைத்து உரிமைகளையும் பெற்று விட வேண்டும் என்கிற வேட்கை என்னுள் உண்டானது. படத்தின் கதையில் அருள்நிதியின் நடிப்பு மிக அபாரமானதாக இருந்தது. இப்படத்தின் வெளியீட்டுக்கு பிறகு அவர் முன்னணி நட்சத்திரங்களுல் ஒருவராக உயர்வார். பல படங்களில் பெருமையுடன் வழங்குகிறோம் என்பதை வாய்வார்த்தையாக உபயோகிப்பார்கள். ஆனால்  இத்திரைப்படம் Sakthi Film Factory நிறுவனத்திற்கு மிக உணர்ச்சிகரமான தருணம் ஆகும். உண்மையிலேயே இப்படத்தை மிக பெருமையுடன் வழங்கவுள்ளோம். இப்படத்தை கண்டிப்பாக தியேட்டரில் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் 2021 ஜூலை 21 அன்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை பெருமையுடன் வெளியிடவுள்ளோம் என்றார்.  


MNM Films நிறுவனம் சார்பில்  அரவிந்த் சிங் கூறியதாவது...


தமிழ் திரையுலகில் மிகப்பெரும் பெயரைபெற்றிருக்கும் Sakthi Film Factory நிறுவனம், எனது முதல் தயாரிப்பாக உருவாகியுள்ள படத்தின் அனைத்து உரிமைகளையும் பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது. தரமான கதைகளை கொண்டு உருவாகும் படைப்புகள், சரியான குழுவினரை சென்றடைந்தால் மிகப்பெரிய அளவிலான வெற்றியை அடையும், எனும் மிகப்பெரும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இத்திரைப்படம் குழுவினர் அனைவரின் கனவின் படி உருப்பெற்றதற்கு, மிக முக்கிய காரணமாய் விளங்கிய நடிகர் அருள்நிதி அவர்களுக்கு இந்நேரத்தில் நன்றியினை தெரிவித்து கொள்கிறேன். தரமான ஒரு படைப்பினை உருவாக்கி, அந்த படைப்பு Sakthi Film Factory நிறுவனம் போன்ற மிகச்சிறந்த நிறுவனத்தால் அங்கீகரிகப்படுவது, மிகப்பெரும் ஊக்கத்தையும், மகிழ்ச்சியையும் அளித்துள்ளது என்றார்.  


இயக்குநர் விஜய் குமார் ராஜேந்திரன் பகிர்ந்துகொண்டதாவது...


எனது முதல் திரைப்படத்தை இயக்கும், இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்த போது, எனது முழுத்திறமையை மட்டும் நிரூபித்தால் போதாது, சினிமா இயக்கும் கனவுகளோடு இருக்கும், மற்ற YouTuber களுக்கு முன்னுதாரணமாகவும் நான் இருக்க வேண்டும், எனபதில் உறுதியாக இருந்தேன். தற்போது எனது படைப்பு, Sakthi Film Factory நிறுவனம் போன்ற மிகப்பெரும் நிறுவனத்தால் அங்கீகரிகப்பட்டு, அவர்கள் மிகப்பெரும் வெளியீடாக, இப்படத்தை வெளியிட இருப்பது,  மிகப்பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. இப்படம் அனைத்து தரப்பினரும் கொண்டாடும் படமாக இருக்கும். அதிலும் கல்லூரி பின்னணியில் கதை நடப்பதால், இளைஞர்களை கண்டிப்பாக ஈர்க்கும். மிகப்பெரிய அளவில் படத்தினை விளம்பரப்படுத்தி, அனைத்து ரசிகர்களிடமும் இப்படத்தினை கொண்டு செல்லும் முனைப்பில் இருக்கிறோம். விரைவில் அதற்கான பணிகள் துவங்கும் என்றார்.

0 comments:

Pageviews