"பொங்குறோம் திங்கிறோம் " ரோபோ சங்கர் தொகுத்து வழங்கும் நகைச்சுவை குக்கிங் ஷோ

 


குக்கிங் நிகழ்ச்சிகளுக்கு பொதுமக்களிடையே உலகம் முழுவதும் பெரும் வரவேற்பு கிடைத்துவருகிறது. குறிப்பாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிகளவு மக்கள் கண்டுகளிக்கும் நிகழ்ச்சியாகவும் சமையல் நிகழ்ச்சிகள்தான் முன்னணியில் இருக்கின்றன.

அந்த வகையில் நடிகர் ரோபோ சங்கர் குருஷி இணைந்து தொகுத்துவழங்கும் நிகழ்ச்சி  "பொங்குறோம் திங்கிறோம்"  .
முழுக்க முழுக்க நகைச்சுவையோடு இந்த  சமையல் நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள்.

இதன் படப்பிடிப்பு   மலேசியாவில் நடைபெறவிருக்கிறது,  மலேசியாவில் மலேசிய உணவுகளைப்பற்றியும் இந்த நிகழ்ச்சியில் முன்னிலைப்படுத்தவிருக்கிறார்கள்.

இந்த  'பொங்குறோம் திங்கிறோம்' நிகழ்ச்சிக்கு  கிரேஷ்கருணாஸ் மற்றும்  சமையல் கலை நிபுணர் வினோத்குமார் நடுவர்களாக பணியாற்றுகிறார்கள்.

இந்த நிகழ்ச்சியில்  அமுதவாணன், தங்கதுரை, நாஞ்சில் விஜயன், ஷர்மிளா, சம்யுக்தா, ஆகாஷ், பிரியா, உதயா, சில்மிசம்சிவா,  சாய், ரஞ்சித், இந்திரஜாரோபோசங்கர், சாய், போட்டியளர்களாக பங்குபெறுகின்றனர்.

நகைச்சுவையோடு , விதவிதமான உணவுவகைகளையும் கண்களுக்கு விருந்தாக்க வருகிறது  'பொங்குறோம் திங்கிறோம்'. 

0 comments:

Pageviews