“N4” படத்திற்கு கிடைத்த சிறந்த இயக்குனர் விருது, மகிழ்ச்சியில் “N4” படக்குழுவினர்
“மை சன் இஸ் கே” என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் லோகேஷ் குமார். முதல் படத்திலேயே பலரது கவனத்தை ஈர்த்த இவர் தனது இரண்டாவது படமாக “N4” திரைப்படத்தை இயக்கியுள்ளார். தரம்ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனமும், பியாண்ட் தி லிமிட் கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது.
வடசென்னை மக்களின் வாழ்வியலை எதார்த்தமான கோணத்தில் காட்டும் இப்படத்தில் மைக்கேல் தங்கதுரை, கேப்ரியல்லா செலஸ், அனுபமா குமார், வடிவுக்கரசி, அபிஷேக் சங்கர், அழகு, அஃப்சல் ஹமீது , வினுஷா தேவி, அக்க்ஷய் கமல், பிரக்யா நாக்ரா என பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சமீபத்தில் வெளியான படத்தின் டிரைலர் பலரின் கவனத்தை ஈர்த்தது.
சமீபத்தில் இப்படம் ‘Calcutta International Cult Film Festival’ எனும் திரைப்பட விழாவில் பங்கேற்றது. போட்டியின் நடுவர்கள் “N4” பட இயக்குனர் லோகேஷ் குமாருக்கு சிறந்த இயக்குனர் விருதை அளித்துள்ளனர். இதனால் இப்படத்தின் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியிலும் உற்சாகத்திலும் உள்ளனர்.
இதன் முன்னர் “N4” திரைப்படம் 11 வது தாதா சாகேப் பால்கே திரைப்பட விழா 2021ல் சிறந்த பின்னணி இசைக்கான விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.
தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்:
தயாரிப்பாளர்கள் - நவீன் சர்மா, யோகேஷ் சர்மா, லோகேஷ் குமார்
தயாரிப்பு நிறுவனம் - தரம்ராஜ் பிலிம்ஸ், பியாண்ட் தி லிமிட் கிரியேஷன்ஸ்
எக்ஸிகியூடிவ் புரொடுயுசர் - ரபேல் ராஜசேகர்
ஒளிப்பதிவு - திவ்யன்க் S
படத்தொகுப்பு - டேனி சார்லஸ்
இசை - பாலசுப்ரமணியன் G
சண்டைப்பயிற்சி - V.கோட்டி
உடைகள் - நந்தா அம்ரிதா, லோகேஷ்
மக்கள் தொடர்பு - சதிஷ் (AIM)
0 comments:
Post a Comment