ஜூன் 4ல் வெளியாகும் புது சீரிஸை புதிர் ததும்பும் ட்ரெய்லர் மூலம் அறிமுகப்படுத்தியிருக்கிறது

 


தி ஃபேமிலி மேன் புதிய (The Family Man) சீரிஸுக்கு பெரிய வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா உள்பட 240 நாடுகளில் அமேசான் ப்ரைம் வீடியோவில் இந்த சீரிஸை மக்கள் கண்டு களிக்கலாம். ராஜ் மற்றும் டிகேவின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த புதிய சீரிஸில் பத்மஸ்ரீ மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி, ஷாரிப் ஹாஷ்மி, சீமா பிஸ்வாஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.  சமந்தா அகினேனி முதல்முறையா ஓடிடி டிஜிட்டல் தளத்தில் தடம் பதித்திருக்கிறார்.

தி ஃபேமிலி மேன் (The Family Man) சீரிஸ் ரசிகர்களின் நீண்ட கால காத்திருப்புக்கு ஓர் முற்றுப்புள்ளி. அவர்களின் எதிர்பார்ப்பை ஈடேற்றும் வகையில், அமேசான் பிரைம் வீடியோ புதிய சீரிஸ் ஜூன் 4 2021ல் வெளியிடப்படும் என அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பைக்கூட ராஜ், டி.கே இணை மிக சுவாரஸ்யமான புதிரான விறுவிறுப்பான ட்ரெய்லர் மூலம் ரசிகர்களுக்கு கொடுத்துள்ளனர். ஸ்ரீகாந்த் திவாரியாக மனோஜ் பாஜ்பாய் அசத்தும் சீசன் 2 காட்சிகள் ரசிகர்களை குதூகலம் அடையச் செய்திருக்கிறது. இந்த புதிய சீசஸ் 9 பாகங்களாக வெளியாகவிருக்கிறது. இதிலும், ஸ்ரீகாந்த் திவாரி ஒரு சராசரி நடுத்தர குடும்பத்தலைவராகவும் உலகத்தர உளவாளியாகவும் அசத்துகிறார். தேசத்தின் மீது நடைபெறவிருக்கும் தாக்குதலைத் தடுப்பதற்காக அவர் எடுத்துவைக்கும் ஒவ்வொரு நகர்வும் ரசிகர்களை இருக்கையின் நுணிக்கு அழைத்து வரும். இந்த புதிய சீரிஸில் எதிர்பாராத திருப்பங்களுக்குப் பஞ்சமே இருக்காது என்கின்றனர் சீரிஸ் குழுவினர். ஸ்ரீகாந்தின் இருவேறு உலகங்களையும் குறையாத விறுவிறுப்புடனும், எதிர்பாராத க்ளைமாக்ஸுடனும் கொடுத்திருக்கின்றனர்.
தி ஃபேமிலி மேன் (The Family Man) புதிய சீரிஸ் ட்ரெய்லரைக் காண:
 https://www.youtube.com/watch?v=NGf_B81Hc2M
 

ட்ரெய்லர் அறிமுகம் குறித்து இந்தியா ஒரிஜினல்ஸ், அமேசான் பிரைம் வீடியோஸ் நிறுவனத்தின் தலைவர் அபர்னா புரோஹித் கூறும்போது, ஒவ்வொரு வீட்டிலும் உச்சரிக்கப்படும் பெயராக எங்கள் சீரிஸின் கதாபாத்திரங்களின் பெயர் இருக்கிறது என்பதே எங்களின் மிகப்பெரிய வெற்றி. தி ஃபேமிலி மேன் (The Family Man) சீரிஸுக்குக் கிடைத்த வரவேற்பும், வெற்றியும், அன்பும் நல்ல தரமான நம்பகத்தன்மை மிக்க கதைகள் எல்லா தடைகளையும் தாண்டி மக்கள் மத்தியில் நீங்கா இடம்பெறும் என்பதற்கு நல்ல சாட்சி.
அந்த வகையில் தி ஃபேமிலி மேன் (The Family Man) புதிய சீரிஸ் இன்னும் ஆழமானதாக, அடர்த்தியானதாக ஆக்‌ஷன் ததும்புவதாக இருக்கும். ஸ்ரீகாந்த்தையும் அவரது எதிரியையும் அவர்களின் பலப்பரீட்சையையும் கண்டு ரசிகர்கள் குதூகலிப்பார்கள் என்பதில் எங்களுக்கு எவ்வித ஐயமும் இல்லை.
கதையம்சம் ரீதியாக ஒரு முத்தான படைப்பை இந்திய மக்களுக்கும் எல்லைகள் தாண்டியுள்ள ரசிகர்களுக்கும் கொடுத்து உணர்வுப்பூர்வமாக ஓர் இணைப்புப் பாலத்தை உருவாக்கியதில் எங்களுக்குப் பெரும் மகிழ்ச்சி. ரசிகர்களைப் போலவே நாங்களும் அடுத்த மாத சீரிஸ் வெளியீட்டுக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்.
படைப்பாளிகள் ராஜ் மற்றும் டிகே, "தி ஃபேமிலி மேன் (The Family Man) சீரிஸின் ட்ரெய்லரை வெளியிடுவதற்காக நாங்களும் ரசிகர்களைப் போல் ஆவலுடன் காத்திருந்தோம். புதிய சீரிஸ் 2021 கோடையில் வெளியாகும் என ரசிகர்களுக்கு நாங்கள் வாக்குக் கொடுத்திருந்தோம். அந்த வாக்கைக் காப்பாற்றியதில் எங்களுக்குப் பெருமகிழ்ச்சி. உங்களின் காத்திருப்பு ஜூன் 4ல் முடிந்துவிடும். ஸ்ரீகாந்த் திவாரி

 ஜூன் 4ல் உங்களின் இல்லங்களைத் தேடி வருகிறார். அதுவும் இந்த புதிய சீரிஸில் சமந்தா அகினேனி சிறப்பாக நடித்திருக்கிறார். அவருடைய கதாபாத்திரம் உங்களைக் கவரும். இந்த பெருந்தொற்றுக் காலத்தில் மிகுந்த சிரமத்துக்கு இடையே நாங்கள் எடுத்துள்ள இத்திரைப்படத்துக்காக ரசிகர்களின் காத்திரப்பு வீண் போகாது என உறுதியளிக்கிறோம். இது மிகவும் துயரமான நேரம். நிச்சயம் காலம் மாறும். பாதுகாப்பாக இருங்கள், முகக்கவசத்துடனேயே இருங்கள். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்" என்றனர்.
இந்த புதிய சீரிஸில் தமிழ் சினிமாவின் வியத்தகு நடிகர்கள் மைம் கோபி, ரவீந்திர விஜய், தேவதர்ஷினி சேட்டன், ஆனந்தசாமி, என்.அழகம்பெருமாள் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.
 சமந்தா அகினேனியின் ஓடிடி டிஜிட்டல் தள என்ட்ரி இந்தப் படம்தான் என்பது பெருமைக்குரிய விஷயம்.

0 comments:

Pageviews