சிலம்பரசன் டி.ஆர் - விஜய் சேதுபதி வெளியிட்ட "காதல் கண்டிஷன்ஸ் அப்ளை" படத்தின் போஸ்டர்

 


லாக்கப் படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகரும் தயாரிப்பாளருமான நிதின் சத்யா தனது தயாரிப்பு நிறுவனமான  "ஷ்வேத்" சார்பாக தயாரிக்கும் மூன்றாவது படம் "காதல் கண்டிஷன்ஸ் அப்ளை"


தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் தனது தயாரிப்பு நிறுவனமான லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் சார்பாக இப்படத்தை வழங்குகிறார்.


இன்று "காதல் கண்டிஷன்ஸ் அப்ளை" டைடில் போஸ்டரை நடிகர் சிலம்பரசன் டி.ஆர் அவர்களும்,  மோஷன் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி அவர்களும் வெளியிட்டனர்.


இயக்குனர் R.அர்விந்த் இயக்கத்தில் இளமையுடன் காதல் ததும்பும் படமாக உருவாகியிருக்கும் "காதல் கண்டிஷன்ஸ் அப்ளை" படத்தில் மஹத் ராகவேந்திரா கதாநாயகனாகவும், சனா மக்புல் கதாநாயகியாகவும் நடிக்கின்றனர்.


மேலும் திவ்யதர்ஷினி, விவேக் பிரசன்னா, அபிஷேக், மகேஸ்வரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.


இசை - ரமேஷ் தமிழ்மணி

ஒளிப்பதிவு - கார்த்திக் நல்லமுத்து

படத்தொகுப்பு - ஆனந்த் ஜெரால்ட்

மக்கள் தொடர்பு - சதீஷ் (AIM)


Motion Poster - https://youtu.be/jFiAvjmrYn4

0 comments:

Pageviews