Rowdy Pictures நயன்தாரா, விக்னேஷ்சிவன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் வினாயக் இயக்கும் “Walking/Talking Strawberry Ice Cream “
நயன்தாரா, விக்னேஷ்சிவன் இணைந்து தங்களது Rowdy Pictures தயாரிப்பு நிறுனத்தின் சார்பில் தரமான படங்களை தயாரித்தும், வழங்கியும் வருகிறார்கள். இந்நிறுவனம் வழங்கும் “ராக்கி” மற்றும் “கூழாங்கல்” போன்ற தரமான படங்கள் உலக திரைப்பட
விழாக்களில் கலந்துகொண்டு பாராட்டுக்களை குவித்து வருகிறது. இந்நிலையில் இந்நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக உருவாகும் “Walking/Talking Strawberry Ice Cream “ படத்தின் துவக்கம் இனிதே பூஜையுடன் துவங்கியது. இயக்குநர் விக்னேஷ் சிவனிடம் “நானும் ரௌடி தான், தானா சேர்ந்த கூட்டம்” படங்களில் பணிபுரிந்த உதவியாளர் வினாயக் அவர்களின் அறிமுக இயக்கத்தில் “Walking/Talking Strawberry Ice Cream “ படம் பொழுதுபோக்கு ரொமான்ஸ் திரைப்படமாக உருவாகிறது. சூரரை போற்று படப்புகழ் KK நாயகனாக நடிக்க, ஜொனிடா காந்தி நாயகியாக இப்படம் மூலம் அறிமுகமாகிறார். மேலும் பல தமிழ் சினிமா பிரபலங்கள் மற்றும் இளம் திறமையாளர்கள் இப்படத்தில் பங்குகொள்கின்றனர்.
இப்படத்தின் இசையமைப்பாளர் தேர்வு நடைபெற்று வருகிறது. ஒளிப்பதிவாளர் ரத்னவேலு உதவியாளர் C.H. சாய் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். கமல்நாதன் கலை இயக்கம் செய்கிறார். படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்காப்படுகிறது.
0 comments:
Post a Comment