இராமானுஜம் - பாக்யம் மூவீஸ் சார்பில் தயாரித்துள்ள படம் தான் " சினிமா கனவுகள்"
பகவதி பாலா, மீரா, ஸ்ரீஜா சரவணன், கிங்காங், வாசு விக்ரம், பயில்வான் ரங்கநாதன், போண்டாமணி. பவர் ஸ்டார் சீனிவாசன், அம்பானி சங்கர். சாவித்திரி, கண்ணன், ஸ்ரீலட்சுமி, ரஞ்சன், கலைவாணி இன்னும் பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி தயாரித்து இயக்கி உள்ள பிரபு இராமானுஜம் கதையைப் பற்றி கூறும் பொழுது, " சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்ற கனவில் பல வருடங்களாக முயற்சித்துக் கொண்டிருக்கும் நாயகன் சரவணனனுக்கு தயாரிப்பாளர் ஒருவர் கிடைத்தார். அவரிடம் தன் கிராமத்தில் நடந்த உண்மை நிகழ்வை கதையாக சரவணன் கூற தயாரிப்பாளருக்கு கதை பிடித்து போகிறது. உடனடியாக படப்பிடிப்பும் துவங்கியது. படமும் திரைக்கு வர ரெடியானது. இந்த நிலையில் தயாரிப்பாளரின் மகள் மீரா இயக்குனர் சரவணனிடம் தன் காதலை வெளிப்படுத்துகிறாள். அந்த காதலை ஏற்க சரவணன் மறுக்கிறான். அதன் பிறகு அவள் செய்த காரியத்தை பார்த்து சரவணன் அதிர்ச்சி அடைகிறான். அதன் பிறகு என்ன நடந்தது? அவன் இயக்கிய படம் வெளிவந்ததா? சரவணன் என்ன ஆனான்? இப்படி பல முடிச்சுகளுக்கு சுவாரஸ்யமாக திரைக்கதை அமைத்து படத்தை இயக்கி உள்ளேன்" என்று முடித்தார். இவர் ஏற்கனவே " காதல் பதிவு" மற்றும் "நந்திவரம்" ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகாஷ் ஸ்ரீதர் இசையையும், திவாகர் எடிட்டிங்கையும் , பவர் சிவா நடனத்தையும், ஏ.எஸ்.உதயசங்கர் ஒளிப்பதிவையும், கமுதி நாகலிங்கம், லாயம் ஷாகுல், தங்கமணி ராகவா மூவரும் பாடல்களையும் ., கலைவாணி இணைத்தயாரிப்பையும் கவனித்துள்ளனர். கதை திரைக்கதை வசனம் இயக்கம் பிரபு இராமானுஜம்.
0 comments:
Post a Comment