பேராசிரியை நிர்மலா தேவி சம்பவத்தை கதைக்களமாக வைத்து உருவாகும் 'எங்க குலசாமி'
'ஆர்யா என்டர்டெய்ன்மெண்ட்' என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் படம் 'எங்க குலசாமி'.
பேராசிரியை நிர்மலா தேவி சம்பவத்தை கதைக்களமாக வைத்து அறிமுக இயக்குனர் விஜயகுமார் இந்தப்படத்தை இயக்குகிறார். கதாநாயகனாக யூடியூப் புகழ் 'ராக் ஸ்டார்' ராஜகுரு அறிமுகமாகிறார்.
பேராசிரியையின் நயவஞ்சக பேச்சில் சிக்கி உயிரிழந்த தன் தங்கையின் மரணத்திற்கு நீதி கேட்டு சட்டத்தை ஹீரோ தன் கையிலெடுப்பதே கதையின் கரு. மருத்துவ கல்லூரி பின்னணியில் உருவாகும் இந்த கதை ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகவுள்ளது.
ஒளிப்பதிவு : ராஜா பட்டாசார்ஜீ
இசை : சாம் டி ராஜ்
இறுதிகட்ட பணிகள் முடிந்து ஏப்ரல் இறுதியில் படம் OTT-ல் வெளியிடப்படவுள்ளது.
0 comments:
Post a Comment