தமிழ் தொலைக்காட்சியில் கண்டிராத மிக பிரமாண்டமான மேடையில் பிரபலமான இசை நட்சத்திரங்கள் போட்டிபோடும் ஜீ தமிழின் "ராக்ஸ்டார்"
புனைகதை (Fiction) மற்றும் புனைகதை அல்லாத (Non-Fiction) மூலம் மிகச் சிறந்த பொழுதுபோக்கைத் தனது ரசிகர்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கும் ஜீ தமிழ் புதிய நிகழ்ச்சி மூலம் மற்றுமொரு ஆச்சரியத்தை ரசிகர்களுக்கு தர இருக்கிறது. இசை ரியாலிடி நிகழ்ச்சிகளிலேயே அதிக ஆர்வத்தைத் தூண்டும் வகையில் புதுமையான வடிவில் நிகழ்ச்சியை சேனல் அறிமுகப்படுத்த உள்ளது. ‘சரிகமப’ மற்றும் ‘பேட்ட ராப்’ ஆகிய நிகழ்ச்சிகளின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து தனது ரசிகர்களுக்காக ‘ராக்ஸ்டார்’ என்னும் பிரபலங்களுக்கான இசை ரியாலிடி நிகழ்ச்சியை இவ்வாண்டு வழங்கும். ஜீ தமிழ் மற்றும் ஜீ தமிழ் ஹெச்டி தொலைக்காட்சிகளில் மார்ச் 28 தொடங்கி ஒவ்வொரு ஞாயிறு அன்றும் இரவு 0730 முதல் 0930 வரை ஒளிபரப்பாகும். நேயர்கள் இந்த ஷோவை தங்கள் ஓய்வு நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் ஜீ5-இல் கண்டு களிக்கலாம்.
இந்நிகழ்ச்சியில் பிரபல இசை அமைப்பாளர், பாடகர் மற்றும் பாடலாசிரியர் ‘ராக்ஸ்டார்’ தேவி ஸ்ரீ பிரசாத் (டி.எஸ்.பி) தமிழ் தொலைக்காட்சி வரலாற்றிலேயே முதன் முறையாக நடுவர் குழுவில் பாடகர்கள் மனோ மற்றும் ஸ்ரீநிவாஸ் ஆகியோருடன் இடம் பெறுவார். ‘ராக்ஸ்டார்’ நிகழ்ச்சியிலுள்ள புதுமை என்னவெனில் தமிழ் தொலைக்காட்சி வரலாற்றிலேயே முதல் முறையாக ஏற்கனவே பிரபலமான மற்றும் நன்கு அறிமுகமான இசை நட்சத்திரங்களை ஒன்றிணைத்து தமிழகத்தில் முதல் ‘ராக்ஸ்டார்’ பட்டத்துக்காக போட்டியிட்டு, வேறெந்த இசை ரியாலிடி நிகழ்ச்சியிலும இல்லாத ஈடு இணையற்ற அனுபவத்தை வழங்குவர்
கிகி மற்றும் ஆர்ஜே விஜய் தொகுத்து வழங்கும் இந்த இசை நிகழ்ச்சியில் ராகுல் நம்பியார், ரஞ்சித், பம்பா பாக்கியா, சத்தியன் மகாலிங்கம், பிரியா ஹிமேஷ், என்எஸ்கே ரம்யா, சின்னப் பொண்ணு, வினைதா, ஐஸ்வர்யா சுரேஷ் உள்ளிட்ட பிரபலங்கள் போட்டியாளர்களாகப் பங்கேற்கின்றனர். பல்வேறு சுற்றுகளுடன் நடைபெறும் கடுமையான போட்டியில் பங்கேற்கும் இசை நட்சத்திரங்களைப் பார்த்து மகிழ்வதுடன், பிரபல மற்றும் திறமையான கலைஞர்களுள் வெற்றி வாகை சூடப் போகும் மிகச் சிறந்தவர் யார் என்பதையும் ரசிகர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.
தமிழகம் முழுவதுமுள்ள இசை ரசிகர்கள் அனைவரும் தொலைக்காட்சியைப் பார்த்து போட்டியாளர்கள் மேடையில் தங்களின் இசை மூலம் ரசிகர்களைச் சுண்டியிழுக்கையில், பார்வையாளர்கள் தங்களுக்குப் பிடித்தமான பாடகர்களுக்கு ஒவ்வொரு வாரமும் (போட்டியின் 2ஆவது வாரம் தொடங்கி) மிஸ்ட் கால் மூலம் வாக்களித்து ஆதரவு தெரிவிப்பார்கள். வாக்களிக்கும் முறை ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு போட்டியாளருக்கான பிரத்யேக எண்களுக்கு மிஸ்ட் கால் தருவதன் மூலம் நடைபெறும்.
இது குறித்து ஜீ எண்டர்டெயின்மெண்ட் எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட், இவிபி மற்றும் தெற்கு வணிகப் பிரிவு களஸ்டர் ஹெட், சிஜூ பிரபாகரன் கூறுகையில் ‘போட்டியாளர்கள் அனைவருக்கும் தொழில்முறைக் கலைஞர்கள் என்பதாலும், ஏற்கனவே ரசிகர்களைக் கொண்ட பிரபலங்கள் என்பதாலும், நிகழ்ச்சியின் நிறைவில் வெற்றியாளரோ, தோல்வியாளரோ இருக்க மாட்டார்கள். இணையற்ற திறமைகளைப் பெற்றுள்ள இக்கலைஞர்களுக்கு வித்தியாசமான சுற்றுகளில் பாடுவதற்கு வாய்ப்பு வழங்குவதன் மூலம் தமிழக மக்களின் இதயங்களைக் கவர்ந்து, இன்னும் பல புதிய உயரங்களுக்குச் செல்லும் ஒருவரைக் தேடிக் கண்டுபிடிப்பதே இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும். இசைப் போட்டி வளையத்துக்குள் களமிறங்க சிறந்தவர்களுள் சிறந்தவர்களை வரவேற்பதுடன், அவர்களுள் மிகச் சிறந்தவர்களைக் கண்டுபிடிக்க தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி நிரூபிக்க வேண்டும்’ என்றார்.
0 comments:
Post a Comment