Street Snacc எத்திராஜ் காலேஜ் எதிரே எக்மோரில் புதிய ஃபாஸ்ட் ஃபுட் கடை திறப்பு !

 


 சென்னை எக்மோரில் எத்திராஜ் காலேஜ் எதிரில், இசை வல்லுநர் Dr.குமரன்  அவர்களின் Street Snacc  ஃபாஸ்ட் ஃபுட் உணவகம் உதயமாகியுள்ளது.


இவ்வுணவகத்தின் உரிமையாளர், இசை வல்லுநர் Dr.குமரன்  அவர்கள் ஒரு டிரம்மர் மற்றும் தாளவாசிப்பாளர் ஆவார். பிரபல இசையமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா, ராஜேஷ் வைத்யா, மணி ஷர்மா, சாம் CS  ஆகியோர் உட்பட பலருக்கும் பின்னணி வாத்தியங்கள் வாசிப்பதில் முன்னணி இசை வல்லுநராக விளங்க கூடியவர். மேலும் 50 மணி நேரம் தொடர்ந்து டிரம் இசைத்து, சாதனை புரிந்து, ஆசியா, இந்தியா, தமிழ்நாடு புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்து  தனித்தன்மை மிக்க கலைஞராக அறியப்படுபவர். இவர் UK Records University  யினால் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார். உலகம் முழுதும் இசை நிகழ்ச்சிகளுக்காக பயணித்தபோது, பல விதமான உணவுவகைகளை முயன்று பார்த்ததன் விளைவாக,  Street Snacc உணவகம் இன்று உதயமாகியுள்ளது.


இப்புதிய உணவகம் Dr. சாம் பால் மற்றும் கலைமாமணி ராஜேஷ் வைத்யா ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது. கடைதிறப்பு விழாவை முன்னிட்டு சமூக நல நடவடிக்கையாக, எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டு அதனை வென்றெடுத்த குழந்தைகள் அழைக்கப்பட்டு சிறப்பு விருந்தினர்களால் அவர்களுக்கு உணவு பரிமாறப்பட்டது. இம்மாதிரியான சமூக நோக்கு நற்செயல்கள் ஒவ்வொரு காலாண்டிலும் இவ்வுணகம் சார்பில் முன்னெடுக்கப்படவுள்ளது.  Street Snacc ஐடியாவின் பின்னணி, சுவை மிகுந்த, தெருவோர கடை உணவுகளை, உயர்தரத்தில் தங்களுக்கே உரித்தான பாணியில் தாங்கள் தேர்வுசெய்த  நலமிக்க சமையல் பொருட்களுடன்,  புதுவிதமாக வழங்குவதே ஆகும்.


இந்த உணவக முயற்சி என்பது, பலவிதமான உணவு வகைகளை ஒரு குடையின் கீழ் வழங்கும் புத்தம் புதிய முதல் முயற்சியாகும்.  Street Snacc உணவகத்தின் சூழல் என்பது, கடைத்தெரு உணவு வகைகளை போன்று அதே சூழலுடன், ஆனால் முழு சுகாதாரத்துடன் அனைவருக்கும் கட்டுபடியாகும் எளிய விலையில் வழங்குவதே ஆகும்.  குமரன் அவர்களின் அடுத்த திட்டமானது வாய்ப்புக்களை வழங்கும் அதே நேரம் தேவைப்படுவோருக்கு தொழில் மற்றும் வேலைவாய்ப்பை முழுநேரமாகவும், பகுதி நேரமாகவும் வழங்குவதே ஆகும்.


0 comments:

Pageviews