சேவியர் பிரிட்டோவின் "எஸ்தல் எண்டர்டெய்னர்" நிறுவனம் தயாரிக்கும் "அழகிய கண்ணே" !!

 


பிரபல திரைப்பட தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ அவர்கள் "எஸ்தல் எண்டர்டெய்னர்" நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கும் திரைப்படம் "அழகிய கண்ணே". இத்திரைப்படத்தை இயக்குநர் சீனு ராமசாமியின் துணை இயக்குனர் R.விஜயகுமார் இயக்குகிறார்.


பிரபல பட்டிமன்ற நடுவர் திண்டுக்கல் I.லியோனி அவர்களின் மகன் லியோ சிவக்குமார் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.கதாநாயகியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார். மேலும் பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். கவிப்பேரரசு வைரமுத்து பாடல்கள் எழுத, N.R.ரகுநந்தன் இசையமைக்கிறார்.  காடன் திரைப்பட ஒளிப்பதிவாளர் A.R.அசோக் குமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பினை பிரபல படத் தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத்தின் மாணவர் சங்கத் தமிழன் கவனிக்கிறார். நடன இயக்குநராக ராதிகா மாஸ்டரும், படத்தின் தயாரிப்பு மேற்பார்வையை இளையராஜா செல்வம் அவர்களும் கவனிக்கிறார்கள்.


இன்று இந்த படத்தின் பூஜை நடைபெற்றது .படப்பிடிப்பு வருகின்ற பிப்ரவரி 15 ஆம் தேதி சென்னையில் துவங்கி சென்னை மற்றும் மதுரையில் தொடர்ந்து நடைபெறவுள்ளது. இதர கதாபாத்திரங்களுக்கான நட்சத்திர தேர்வு நடைபெறுகிறது.


நடிகர்கள் :லியோ சிவக்குமார், சஞ்சிதா ஷெட்டி


தொழில்நுட்பக்குழு :

இயக்கம்  - R.விஜயகுமார்

தயாரிப்பு - சேவியர் பிரிட்டோ ( எஸ்தல் எண்டர்டெய்னர்)

பாடல்கள் - வைரமுத்து

இசை - N.R.ரகுநந்தன்

ஒளிப்பதிவு - A.R.அசோக் குமார்

படத்தொகுப்பு - சங்கத் தமிழன்

நடனம் - ராதிகா

தயாரிப்பு மேற்பார்வை - இளையராஜா செல்வம்

மக்கள் தொடர்பு - ரியாஸ் கே அஹ்மத்


0 comments:

Pageviews