“காலை அதிகாலை” இசையமைப்பாளர் தரண் குமார், மதன் கார்கி, சித் ஶ்ரீராம் கூட்டணியில் ஒரு அழகான காலை ஆந்தம் !
வெகு சில பாடல்களே நம் காலையை அழகாக்குக்கின்றன. நம் நாளை உற்சாகத்துடன் துவக்க, நமக்கு புத்துணர்ச்சி தருகின்றன. இசையின் பல முனைகளிலும் பரிசோதனை செய்து, அழகான இசையை தரும் இசையமைப்பாளர் தரண் குமார் தற்போது மற்றுமொரு அற்புதமான பாடலொடு வந்திருக்கிறார். “காலை அதிகாலை” எனும் இப்பாடல் பரத் நிவாஸ் மற்றும் அபர்ணா வினோத் நடிக்கும் “நடுவன்” படத்தில் இடம்பெற்றுள்ளது.
இப்பாடல் குறித்து இசையமைப்பாளர் தரண் குமார் கூறியதாவது...
காலை பொழுதை அழகாக்கும் மனதிற்கினியதொரு பாடலை உருவாக்க வேண்டுமென்கிற, எனது நெடுநாள் கனவு “காலை அதிகாலை” பாடல் மூலம் நிறைவேறியுள்ளது. பாடலாசிரியர் பொன் போன்ற வார்த்தைகளால் மிக தரமான வரிகளை தந்துள்ளார். அவரது அட்டகாசமான வரிகள் என்னுள் மேலும் உற்சாகத்தை ஊட்டி அற்புதமான இசையை கொண்டுவந்தது. இப்படாலின் காட்சி வடிவம் நாயகனின் வழக்கமான அதிகாலை பொழுதை, பனி நிறைந்த காலையில் ஜாக்கிங் போவதை, காலை பனியில் காற்றின் மகரந்தத்தை, அந்த அனுபவத்தை காட்சிபடுத்தியுள்ளது. கவிதை நிரம்பிய காலை பாடல்கள் என வரும்போது க்ளாசிக்கல் சுப்ரபாதம் பாடல்களே முன்னணியில் இருக்கின்றன. அதனால் இப்பாடலை கர்னாடிக் ஃப்யூசன் கலந்து இளைஞர்களுக்கும், வயது வந்தோர்க்கும் பிடிக்கும் வகையில் உருவாக்கினோம். சித் ஶ்ரீராம் தனது அற்புத குரலால் அழகான உச்சரிப்பில் பாடலில் தன் தனி முத்திரையை பதித்துள்ளார். பெரும்பாலான காலை பாடல்கள் பெண் குரலால் தான் பாடப்பட்டிருக்கும் இப்பாடலின் மூலம் அந்த விதியினை உடைக்க நினைத்தோம். ஒரு பாடலின் முழுமையான வெற்றி என்பது நல்லதொரு இசை, அழகான வரிகள், அற்புதமான குரல் அனைந்தும் பொருத்தமாக இணைவதால் சாத்தியமாகும் அந்தவகையில் “காலை அதிகாலை” பாடல் எனக்கு முழுமையான திருப்தியை அளித்துள்ளது.
ஷரங் எழுதி இயக்கியிருக்கும் “நடுவன்” படத்தினை லக்கி ஜாஜர் ( lucky chhajer) க்யூ எண்டர்ட்யின்மெண்ட் (Cue Entertainment) சார்பில் தயாரித்துள்ளார். பரத் நிவாஸ், அபர்ணா வினோத் தவிர கோகுல் ஆனந்த், யோக் ஜேய்பி, ஜார்ஜ், பாலா, தசரதி குரு, கார்த்திக், சுரேஷ் ராஜு மற்றும் ஆரத்யா ஶ்ரீ நடித்துள்ளனர்.
தரண் குமார் இசையமைத்துள்ளார். யுவா ஒளிப்பதிவு செய்துள்ளார். சன்னி சவ்ரவ் படத்தொகுப்பு செய்துள்ளார். சசி குமார் கலை இயக்கம் செய்துள்ளார். பாடல்களை மதன் கார்கி மற்றும் Dr.பர்ன் எழுதியுள்ளனர்.
0 comments:
Post a Comment