Benchmark Films தயாரிப்பில், விதார்த் நடிக்கும் 25 வது படம்
நடிகர் விதார்த், நல்ல படங்களின் காதலன், நட்சத்திர அந்தஸ்தை பொருட்படுத்தாமல் நல்ல படங்களை தொடர்ந்து செய்து, மிகச்சிறந்த நடிகர் எனும் பெயரை பெற்றிருப்பவர். நல்ல சினிமாவின் தீவிர காதலர். வேறு வேறு ஜானரில் ஆயிரம் பொற்காசுகள், அன்பறிவு, என்றாவது ஒரு நாள், ஆற்றல், அஞ்சாமை என ஐந்துபடங்களை தற்போது செய்து வருகிறார். இந்நிலையில் அவர் நடிப்பில் 25 வது படம் தற்போது தயாராகிறது. Benchmark Fims நிறுவன தயாரிப்பாளர்கள் ஜோதி முருகன், சீனிவாசன் ஆகியோர் தயாரிப்பில் இயக்குநர் சீனிவாசன் இப்படத்தினை இயக்குகிறார்.
புதுமையான திரில்லர் பாணியில் உருவாகும் இத்திரைப்படம், ஆறு பகல்கள் மற்றும் ஏழு இரவுகளில் கதை நடப்பதாக அமைக்கப்பட்டிருக்கிறது. நாயகனுக்கு வரும் கனவுகளை மையப்படுத்தி திரில்லுடன் பரபரப்பாக நகரும் படத்தில், ஒவ்வொரு இரவிலும் நாயகனுக்கு ஒரு குறுப்பிட்ட கனவு வரவேண்டும் என்கின்ற தவிப்பை பார்ப்பவர்களுக்கு ஏற்படுத்தும் விதமாக திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. 38 நாட்கள் நடந்த படப்பிடிப்பில் ஒரு பகுதி திருக்கோவிலூரில் நடந்தது மற்ற அனைத்து பகுதிகளும் சென்னையில் படமாக்கப்பட்டது. படத்தில் இசை முக்கிய பங்கு வகிப்பதால் படத்திற்காக முன்னணி இசையமைப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. படத்தின் தலைப்பு , டீஸர், ட்ரெய்லர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
இப்படத்தில் விதார்த், தன்யா பாலகிருஷ்னன், விக்ரம் ஜெகதீஷ் (ஒண்டிக்கட்ட நாயகன்), பவுலின் ஜெசிகா (வாய்தா நாயகி), மாரிமுத்து, மூனார் ரமேஷ், அஜய், வினோத் சாகர், மூர்த்தி (பிச்சைக்காரன்), Doubt செந்தில், சுபா வெங்கட், பேபி ஜனனி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்
கலை – ஜெயச்சந்திரன் BFA
எடிட்டிங் – பிரவீன் K L
சண்டை – கனல் கண்ணன்
ஒளிப்பதிவு – விவேக் ஆனந்த்
தயாரிப்பு – ஜோதி முருகன், சீனிவாசன்
இயக்குனர் – சீனிவாசன்
0 comments:
Post a Comment