இந்தியாவில் சினிமா திரையரங்குகள் திறந்தவுடன் வெளியாகிருக்கிற முதல் 3D படம்
25 வருடங்களாக இயக்குனராக செயல்பட்டு வரும் Paul W. S . Anderson
இயக்கியுள்ள இப்படம், இந்தியாவில் சினிமா திரையரங்குகள் திறந்தவுடன்
வெளியாகிருக்கிற வெளியாகிற முதல் 3D படமாகும்!
பிரபல வீடியோ கேம் தொடரான Capcom வை தழுவி உருவாக்கப்பட்டுள்ள
பிரம்மாண்டமான திரைப்படமிது!
Corona இடைவெளிக்கு பிறகு, Sony Pictures Entertainment இந்த முதல் முக்கிய
மாபெரும் வெளியீடு, இப்படம்!
Milla Jovovich கதையின் நாயகி! இயக்குனர் Anderson -இன் வாழ்க்கையின்
நாயகியும் கூட என்பது குறிப்பிடத்தக்கது !
இவர்கள் இருவரும் இணையும் 5 -வது படமிது!
Japan சென்றிந்த பொழுது, Monster Hunter வீடியோ கேம் பற்றி கேள்விப்பட்ட
Anderson னுக்கு அதனை ஒரு முழு நீள திரைப்படமாக உருவாக்க வேண்டும்
என்கிற உந்துதல் ஏற்பட, உடனடியாக காலத்தில் இறங்கி தனது எண்ணத்தை
செயல் வடிவில் கொண்டு வர முற்படலானார் !
படத்தின் முக்கிய அம்சம், மிக பெரிய, மாறுபட்ட, விசித்திரமான உருவில்
தனியொரு உலகில் உலா வரும் ராட்சச வடிவிலான உயிரினங்கள்!
Computer Graphics துணைகொண்டு அவற்றையெல்லாம் உயிரினங்களாக
உருவாக்கி உலாவரச்செய்வதென்பது ஒரு சவாலான செயல்பாடாகும்!
அதனை வெகு சிறப்பாக திரையில் வடித்துள்ளார் இயக்குனர்!
Tony Jaa ஒரு சிறந்த சண்டை கலையில் பிரசித்தி பெற்ற நடிகர். நல்லதோரு
நகைச்சுவை உணர்வும் மிக்கவர்!
Milla மற்றும் Tony ஆகிய இருவரும் மாறுபட்ட சூழ்நிலையை சார்ந்தவர்கள்!
உலகையே அச்சுறுத்தி மனித குலத்திற்கே அபாயம் விளைவிக்க முற்படும்
இந்த விசித்திர விநோதமான ராட்சஸத்தனமான அரக்கர்களையும்
அசுரர்களையும் Milla மற்றும் Tony ஆகிய இருவரும் இணைந்து போராட்டம்
நடத்துவதுதான் படத்தின் கதைக்கரு!
மிக அதிக பொருட்செலவில் வெகு விமர்சையாக உருவாக்கப்பட்டுள்ள
சண்டை காட்சிகள் படத்தின் பிரதானம்!
இப்படத்தை 3D மற்றும் IMAX வடிவிலும் கண்டு களிக்கலாம்!
இசை - Paul Haslinger ஒளிப்பதிவு -Glen MacPherson
படத்தொகுப்பு -Doobie White
Sony Pictures நிறுவனத்தின் வெளியீடு, இப்படம்.
0 comments:
Post a Comment