நியூயார்க் பிரஸ் ஏஜென்சி- 2020 ஆண்டு ஆசியாவின் சிறந்த செல்வாக்குமிகுந்த 500 நபர்களில் ஒருவராக நிக்கிகல்ரானி!

 


பிரிட்டிஷ் ஊடகவியலாளர் கிரண் ராய் மற்றும் ரால்ப் பெரிரா ஆகியோர் ஆசியாவின் பல்வேறு துறைகளில் இருக்கும் கலைஞர்களிடம்  நடத்திய நேர்காணலின் மூலம் சிறந்த 500 நபர்களை தேர்வு செய்துள்ளனர் .அதில் நிக்கி கல்ராணி ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் .


இந்த வரிசையில் AR ரஹ்மான் , kS சித்ரா , சோனு நிகம், சாய்னா நஹ்வால், சானியா மிர்ஸா , நிக்கிகல்ரானி , குணால் கபூர் , மற்றும் பல்வேறு துறைகளை சார்ந்தவர்கள் இடம் பெற்றுள்ளனர் .


இதுகுறித்து நிக்கிகல்ரானி  "பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் ஜாம்பவான்கள் வரிசையில் என்னையும் தேர்ந்தெடுத்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சியைம் , பெருமையும் அளிக்கிறது. கிரண் ராய்

அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்"

 

நிக்கிகல்ரானி   கடந்த 2014ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி வெளிவந்த ‘1983’ எனும் மலையாளப் படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக அறிமுகமானார்.தமிழ் சினிமாவில் 2015ம் ஆண்டு வெளிவந்த ‘டார்லிங்’ படம் மூலம் அறிமுகமானார். இதனை தொடர்ந்து ‘‘யாகாவாராயினும் நாகாக்க, கோ 2, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், கடவுள் இருக்கான் குமாரு, மொட்ட சிவா கெட்ட சிவா, மரகத நாணயம், நெருப்புடா, ஹரஹர மகாதேவகி, கலகலப்பு 2, பக்கா, சார்லி சாப்ளின் 2, தேவ், கீ,” உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். அடுத்ததாக நிக்கிகல்ரானி நடித்துள்ள ராஜவம்சம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது 

0 comments:

Pageviews