கேஜிஎப் - சேப்டர் 2- ரவீனாவின் திரை அனுபவம்

 


ஹோம்பேல் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் கேஜிஎஃப் சேப்டர் 2 திரைப்படத்தின் டீஸர் வரும் ஜனவரி 8-ல் வெளியாகவிருக்கிறது. ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிக்கும் இப்படத்தில், முதன்முறையாக அவருடன் இணைந்து நடித்துள்ளார் ரவீனா டான்டன். 

இது குறித்து அவர் தனது அனுபவங்களைப் பகிந்துள்ளார். 

அதில் அவர், "யாஷ் ஒரு சிறந்த மனிதர். அவருடன் நடித்த அனுபவம் பிரமாதமானது. அவருடைய திறமைகள் வியக்கத்தக்கது. பார்த்துப் பார்த்து பக்குவமாகப் பணி செய்யும் நடிகர். அவருடன் நடித்ததில் எனக்குப் பெருமகிழ்ச்சி. என்னைப்போல் எனது ரசிகர்களும் இதனைக் கொண்டாடுகின்றனர். சமூக வலைதளங்களில் அவர்களின் ஆர்ப்பரிப்பை நான் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். என்னை திரையில் யாஷ்-உடன் பார்க்க அவர்கள் குதூகலமாகக் காத்திருக்கின்றனர். நானும் குதூகலத்துடன் தான் பணியாற்றினேன்.

கேஜிஎஃப்-1 பிரம்மாண்ட வெற்றி கண்ட படம். அதே எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் கேஜிஎஃப்-2-வை எதிர்கோக்கியுள்ளனர். கேஜிஎஃப்-2

படத்தில் எனது கதாபாத்திரம் மிக மிக வித்தியாசமானது. சுவாரஸ்யமானதும்கூட. ஆனால், அதைத்தாண்டி கதாபாத்திரம் குறித்து இப்போதைக்கு என்னால் சொல்ல முடியாது. நான் ஏற்று நடிக்கும் ராமிகா சென் கதாபாத்திரம் மிகவும் சக்திவாய்ந்தது, சிக்கலானதும் கூட. அழுத்தமான அந்த கதாபாத்திரத்தின் போக்கை அவ்வளவு எளிதாக ரசிகர்கள் கணித்துவிடமுடியாது. அடர்த்தியான கதாபாத்திரம் என்பதால் நான் திரையில் தெறிக்கவிடும் ஆக்‌ஷன் காட்சிகளில் இடம்பெற்றிருக்கிறேனா என ரசிகர்கள் கேட்கலாம். ஆனால், அதை ரசிகர்கள் காத்திருந்த திரைப்படத்தில் பார்த்தால் தான் சுவாரஸ்யமாக இருக்கும்.

முதன்முதலில் பிரசாந்த் நீல் எனது கதாபாத்திரத்தைப் பற்றி விளக்கியபோதே எனக்குக் கதைக்களம் மிகவும் பிடித்துவிட்டது. அப்போது நான் கேஜிஎஃப் முதல் பாகத்தைப் பார்த்திருக்கவில்லை, ஆனாலும் எனக்கு கதைகளம் மிகவும் பிடித்திருந்தது. அப்புறம் கேஜிஎஃப் முதல் பாகத்தைப் பார்த்தேன், ஆச்சர்யத்தில் மூழ்கினேன். முற்றிலுமாக என்னை ஆட்கொண்டுவிட்டது அப்படம். சினிமா வரலாற்றில் கேஜிஎஃப்-1 ஒரு புதிய முயற்சி என்றே நான் கூறுவேன். 

பிரசாந்த் நீல், ஹோம்பேல் ஃபிலின்ஸுடன் இணைந்து பணியாற்றுவது போல் எனக்கு வேறெதுவும் சுவாரஸ்யமாக இருந்ததில்லை. பிரசாந்த், வித்தியாசமான கதைகளை யோசனைகளை படைப்பாற்றலைக் கொண்டவர். அதுதான் அவரை இத்தகைய வியத்தகு படைப்புகளைத் தர வைக்கிறது. அதுவும் பணிகளை அமைதியாக பக்குவமாக அவர் மேற்கொள்ளும் பாணியே தனிச்சிறப்பானது" எனக் கூறியிருக்கிறார்.


0 comments:

Pageviews